28/05/2019
நண்பர் திருச்சி பசீர் அவர்களின் பதிவு. அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக...
எதிலும் புதுமையை விரும்பும் நான், புதிய முயற்சியாக தெர்மாகோல் வீடு கட்ட வேண்டும் என்ற ஆவலை நிறைவேற்றும் விதமாக ஒரு இன்ஜினியர் நண்பரின் ஆலோசனையில் பரிசார்த்த முயற்சியாக இறைவனின் கிருபையால் ஒரு வீட்டை கட்டிக்கொண்டு இருக்கிறேன்,
அந்த இன்ஜினியர் நண்பர் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தெர்மாகோல் வீட்டை 5 வருடங்களுக்கு முன்பே கட்டிவிட்டார் அந்த வீட்டின் உறுதி தன்மையை பார்த்து தான் நானும் சம்மதம் தெரிவித்தேன்.
தெர்மாகோல் வீட்டின் நன்மைகள்:
1. சாதாரண செங்கல் வீட்டை விட ஐந்து மடங்கு உறுதியானது,
2. சாதாரண செங்கல் வீட்டை விட எட்டு மடங்கு எடை குறைவானது.
3. சுவர்களின் கணம் குறைவாக இருப்பதால் வீட்டின் உள் பக்கம் நிறைய இட வசதிகள் கிடைக்கிறது. சிறிய அளவு இடங்களில் கூட அதிக இட வசதியுடன் வீட்டை கட்டலாம்.
4. பூகம்ப காலங்களில் வீடு இடிந்து விழாது, கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்களின் சாதா செங்கல் வீடுகள் உள்ள அரிப்புகள் இந்த வீட்டில் இருக்காது.
5. முக்கியமாக வீட்டின் உள்ளே, வெளியே உள்ள அனல் காற்றை கடத்தாது, வீடு எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும் .
6. செங்கல் மணல் என்ற தொல்லை இதில் அதிகம் இல்லை.
7. செங்கல் வீட்டிற்கு ஆகும் சிலவில் இருந்து சிறுது மட்டும் குறைகிறது, யு டியூப் சானல்களில் சொல்வது போல எட்டு லட்சத்தில் ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டினேன் என்று விளம்பரம் படுத்துகிறார்கள் அது முற்றிலும் தவறு அங்கே சதுர அடி1600+ வாட் வரி என்று போட்டு இருக்கிறார்கள் எப்படி பார்த்தாலும் சதுர அடிக்கு 1800 ரூபாய் வந்து விடும். ஆகையால் யு டியூப் சானல்களில் கூறும் தொகையை நம்ப வேண்டாம். ( 1600 ரூபாய்க்கு கட்டி தருகிறேன் என்று விளம்பரம் செய்தவரிடம் போனில் விசாரித்தால் தண்ணீர் டேங்க், வீட்டிற்க்கு வண்ணம் பூசுதல், பிளம்பிங் வேலைகள் எல்லாம் செய்து தர மாட்டோம் அதை செய்வதாக இருந்தால் நீங்கள் தனியாக பணம் தர வேண்டும் என்று கூறினார்)
8. வீட்டின் எடை குறைவாக இருப்பதால் அதிக அளவு அஸ்திவாரம் போட வேண்டாம் அதிலும் சிறிய தொகை நமக்கு மிச்சம் ஆகும்
குறைகள் என்று பார்த்தல் சில வருடங்கள் கழித்து பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டும் என்றால் நம் இஷ்டத்துக்கு கொத்தனார் சித்தாள்களை கூப்பிட்டு செய்யமுடியாது, இந்த தொழில் நுட்பம் தெரிந்த ஆட்களை வைத்து தான் பராமரிப்பு வேலைகள் செய்ய முடியும். இது ஒன்று தான் குறை.
தமிழ் நாட்டில் இதே போன்ற தெர்மோகோல் பேனல் வீடு எங்கு கட்ட வேண்டுமானாலும் என் இன்பாக்ஸை தொடர்பு கொள்ளுங்கள் என்னால் முடிந்த உதவிகளை ஆலோசனைகளை செய்து தருகிறேன்.