10/04/2024
#பெருநாள்சிந்தனைகள்
பெருநாள் கொண்டாட்டத்தின் நோக்கமும், அதன் மகிழ்ச்சியும் இருப்பவனுக்கு மட்டுமல்ல; இல்லாதவனுக்கும் சொந்தமாக்க வேண்டும் என்பதே.
இரமலான் முதல் பிறை பார்த்ததும் 29 அல்லது 30 நாட்கள் வரை நோன்பு நோற்கிறார்கள், பசியும் தாகமும் உணர வேண்டும் என்பதற்காக. இந்தப் பயிற்சி நிறைவடையும்போது ஷவ்வால் மாதம் முதல் பிறை தோன்றுகிறது.
அடுத்த நாள் காலை இனிப்புப் பண்டங்கள் செய்து உண்டு மகிழ்ந்து நோன்பை முடி(றி)க்க வேண்டும். இந்த நாளில் கட்டாயமாக நோன்பு இருக்கக் கூடாது.
ஆகவேதான், இந்த நாளை #ஈதுல்_ஃபித்ர் - என்கின்றனர்.
#ஈதுல்
என்பதைக்கேட்கும்போது ஈதல் என்ற தமிழ்ச்சொல் மனத்தில் எழுகிறது.
#ஈ
#தா
#கொடு எனும் மூன்றனுக்கும் வேறுபாட்டை விளக்கும்போது தமிழ் இழிந்தோரை துணைக்கழைக்கிறது.
பெருநாளின் பெருமை வழங்குதலிலேயே நிறைவுறுகிறது.
இன்னும் வியப்பிலாழ்த்துவது எதுவென்றால் #ஈத்_முபாரக் என்ற சொல்லாக்கம்.
#ஈத்துவக்கும்_இன்பம் (joy of giving)
என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.
பெருநாள் #ஈத் என்ற சொல்லமைப்பைக்கொண்டுள்ளது.
உங்களால் நான் எந்த இடத்தை நோக்கி நகர்கின்றேன் ஏன்ற அடிப்படையை உணரமுடிகிறதா?
#தமிழடிப்படை
#முதல்மாந்தன்
#மீளின்மீள்