24/11/2023
🙏சபரிமலைக்கு நாம் எடுத்து செல்லும் இருமுடியில் உள்ள பொருட்களை முறையாக யார் யாருக்கு படைக்க வேண்டும், கொடுக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா சுவாமிமார்களே🙏
🙏சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசித்த பின்பு ஒரு நல்ல இடத்தில் விரி( தங்குவதற்கான இடம்) வைத்து இருமுடிகளை அங்கு வைத்து சிறிது ஓய்விற்க்கு பின் குருநாதர் சுவாமிமார்களின் எதிரே கற்பூர ஆரத்தி காட்டி சரணம் சொல்லி இருமுடிகளை பிரிக்க வேண்டும் 🙏
🙏இருமுடி பிரித்த பின்பு அதனுள் இருந்த பொருட்களை கீழ் கண்ட தெய்வங்களுக்கு படைத்து பதிலுக்கு அங்கு கொடுக்கும் பிரசாதத்தை வீட்டிற்க்கு எடுத்து வர வேண்டும்🙏
👏கவனிக்கவும்👏
👇
👇🌹👇🌹👇
1. ஐயப்பசுவாமிக்கு
👇
நெய்
2. மஞ்ச மாதாவுக்கு👇
மஞ்சள் தூள்,குங்குமம், காதோலை கருகமணி, கண்ணடக்கம், ஜாக்கெட் துணி,மஞ்சள் கிழங்கு,
3.பச்சரிசி, அச்சு வெல்லம், தேவஸ்தான அண்ணதான கவுண்டரில் கொடுத்தால் அதற்கு பதிலாக சக்கரை பொங்கல் தருவார்கள் சுவாமிகள் அதை சாப்பிடலாம். 🙏
4. 18ம் படி அருகே உள்ள மரத்தின் எதிரே வாவர் சுவாமி நடை உள்ளது, அங்கு, மிளகு, பன்னீர்,( சில சாமிகள் பன்னீரை தெளித்து கொண்டு போவார்கள் இது தவறு) ஊதுபத்தி, அத்தர் ஜவ்வாது, மற்றும் வாசனை திரவியங்களை கொடுக்கவேண்டும்.
5. சபரிமலை மேல் சாந்தி அவர்களுக்கு கற்கண்டு, முந்திரி,திராட்சை, பேரீட்சை, நெல் பொரி,அவல் பொரி இவற்றை கொடுத்து ஆசி வாங்கவேண்டும்.🙏 மேல்சாந்தியை பார்ப்பதற்கு சிரமமாக இருந்தால் ஆங்காங்கே வைத்திருக்கும் தேவஸ்தான அகண்ட பாத்திரத்தில் அதை போட்டு விடவேண்டும். 🙏
6. விபூதியை மஞ்சமாத கோயில் வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் சுற்றும் தூவி அங்குள்ள விபூதி சிறிதளவு எடுத்து வீட்டிற்க்கு எடுத்து
வரவும்🙏
( ஸ்ரீ ஐயப்பசாமி யோக நிஷ்டையில் கடைசியாக ஜீவ ஐக்கியமான இடம்( ஐயப்பனின் ஜீவசமாதி) தான் மணி மண்டபம் ஆற்றல் நிறைந்தது. அதில் கிடைக்கும் விபூதி சக்தி வாய்ந்தது)
🙏இப் பொருட்களில் பச்சரிசி சிறிதளவு , முந்திரி, திராட்சை, அச்சு வெல்லம் இவற்றை எடுத்து இருமுடி பையில் வைத்து வீட்டுக்கு வந்து அதை சக்கரை பொங்கலாக செய்து ஐயப்ப சுவாமிக்கு படைத்து பிறகு அனைவரும் உண்டு,உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி ஐயனின் அருளை பெறலாம். 🙏
🙏விபூதி, மஞ்சமாத மஞ்சள்,ஒரு ஜாக்கெட் துணி இவைகளை பிரசாதமாக வீட்டிற்க்கு எடுத்து வரவேண்டும். 🙏 திருமண தடை உள்ள பெண்களும்,குழந்தை இல்லா பெண்களும் இந்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டால் அவர்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும் இது சத்தியமான உண்மை🙏
🙏நெய் அபிஷேகம் பண்ணியதும் சிறிதளவு நெய்யை பிரசாதமாக கொடுப்பார்கள் அதையும் வீட்டிற்க்கு எடுத்து வந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.( முக்கியமான விஷயம் நெய்யை அசைவ உணவுகளில் கலந்து சாப்பிடக்கூடாது. மற்றும் பிரசாத நெய்யை பூஜை அறையில் மட்டுமே வைக்க வேண்டும் ) 🙏
சில சுவாமிகள் அபிஷேக பொருட்களை மொத்தமாக அண்ணதான உண்டியலில் போட்டு விடுகிறார்கள் இது தவறான செயல். முறையாக செய்தால் தான் முறையான பலன் கிடைக்கும். 🙏
பதிவில் உள்ள அனைத்து விஷயங்களையும், தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லியும், தெரியாதவர்கள் தெரிந்து கொண்டும் சுவாமி ஐயப்பனின் அருள் ஆசி பெறுமாறு கேட்டு கொள்கிறேன்...
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙇🙏