16/04/2020
சூப்பர் 7
ஸ்ஷ்விங் ஸ்டெட்டரின் புதிய கான்கிரீட் டிரக் மிக்சர்
கான்கிரீட் இயந்திரங்கள், வாகனங்கள், (கான்கிரீட் பம்புகள், கான்கிரீட் ட்ரக் மிக்ஸர்கள்) தயாரிக்கும் ஸ்ஷ்விங் ஸ்டெட்டர் நிறுவனம் சர்வதேச அளவிலான கட்டுமான இயந்திரங்கள், வாகனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாகும்.
ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட 12 நாடுகளில் உள்ள தங்களது தொழிற் சாலைகள் மூலம் உலக கட்டுமானத்துறைக்கு தங்களது பங்களிப்பை கடந்த 20 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. ஸ்ஷ்விங் ஸ்டெட்டர் நிறுவனம் ஏறத்தாழ இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட 150 நாடுகளில் தங்களது விற்பனை மற்றும் சேவை மையங்களைக் கொண்டிருக்கிறது.
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரெடிமேட் கான்கிரீட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உறு துணையாக பல்வேறு வகையான கான்கிரீட் தொடர்பான இயந்திரங்கள், சாதனங்கள், வாகனங்களை உற்பத்திச் செய்யும் ஸ்ஷ்விங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனம் சென்ற மாதம் சூப்பர் ® 7 என்கிற புதுவகை கான்கிரீட் ட்ரக் மிக்ஸரை அறிமுகப்படுத்திருக்கிறது.
குறைந்த எரிபொருள் செலவில் இயங்கக்கூடிய சூப்பர் 1 ® 7 கான்கிரீட் ட்ரக் மிக்ஸர் பல்வேறு வகையான சிறப்பம்சங்களின் செயல்பாடுகளைக் கொண்டது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா பவரோல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய ட்ரக் மிக்ஸர் சந்தைக்கு வந்திருக்கிறது.
ஸ்ஷ்விங் ஸ்டெட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. வி.ஜி. சக்தி குமார் பேசுகையில்,
‘‘நாடு முழுக்க உள்ள எங்களது வாடிக்கையாளர்களின் தேவையின் அடிப்படையில் பல்வேறு ஆராய்ச்சி களுக்குப் பிறகு சூப்பர் ® 7 ட்ரக் மிக்ஸர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் ® 7 ட்ரக் மிக்ஸரில் with IoT in / IoT ready, Schwing Smartrack/ Standard என இரு வகையான வேரியன்டுகளை நாங்கள் அறிமுகப் படுத்துகிறோம்.
இவற்றில் அதிக கொள்ளளவு, குறைந்த எரிசக்தி, சீரான கான்கிரீட் மிக்ஸிங், 100% கான்கிரீட்டை அன்லோட் செய்கிற வசதி, சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் எளிதாக இருத்தல், போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. சூப்பர் ® 7 கான்கிரீட் ட்ரக் மிக்ஸர் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கான்கிரீட்டின் தரத்திற்கு, குறித்த நேரத்தில் டெலிவரிக்கும் உத்திரவாதத்தை தருகிறது’’ என்றார்...