19/09/2026
இலங்கை எரிசக்தி அமைச்சின் 2026 செப்டம்பர் 11 முதல் அமுலுக்கு வரும் புதிய உத்தரவு
எரிசக்தி அமைச்சினால் Electricity Distribution Lanka (Pvt) Ltd (EDL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட PE/DEV/03/01-RT, 2026.09.11 தேதியிட்ட எழுத்துமூல உத்தரவின் மூலம், தேசிய மின்சாரக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “Net Plus” நடைமுறை எவ்வாறு அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பின்னணி
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் தேசிய கட்டணக் கொள்கை ஆகியவை 2026 மார்ச் 05 அன்று வெளியிடப்பட்ட 2478/42 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டன.
அதில் 5.2 பிரிவின் 1.4(e) துணைப்பிரிவின்படி, தேசிய மின்சார வலையமைப்புடன் இணைக்கப்படும் அனைத்து புதிய கூரை சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களும் “Net Plus” அடிப்படையில் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் புதுப்பிப்புகளும் Net Plus அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2026.08.31 அன்று EDL நிறுவனம், இதனை Public Utilities Commission-ன் Feed-In Tariff தீர்மானத்துடன் எவ்வாறு இணைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தது.
அமைச்சினால் வழங்கப்பட்ட முக்கிய உத்தரவுகள்
• 2026 மார்ச் 05 அல்லது அதற்குப் பின்னர் கையெழுத்திடப்படும் அனைத்து புதிய Grid-connected Rooftop Solar ஒப்பந்தங்களும் Net Plus அடிப்படையில் இருக்க வேண்டும்.
• ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும் போது, புதுப்பிக்கும் தேதியிலிருந்து அவை Net Plus முறைக்கு மாற்றப்பட வேண்டும்.
• புதிய இணைப்புகள் அல்லது ஒப்பந்தப் புதுப்பிப்புகளுக்கு Net Metering மற்றும் Net Accounting முறைகள் இனிமேல் வழங்கப்படாது.
• தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவை காலாவதியாகும் வரை தற்போதைய விதிமுறைகளின் கீழ் தொடரும். புதுப்பிக்கும் நேரத்தில் மட்டுமே Net Plus முறைக்கு மாற்றப்படும்.
• Rooftop Solar ஒரு பரிணமித்த Renewable Energy தொழில்நுட்பமாக கருதப்படுவதால், எந்தவொரு ஒப்பந்தத்தின் அல்லது புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் காலமும் 12 ஆண்டுகளைத் தாண்டக்கூடாது.
• ஒவ்வொரு Solar PV அமைப்பிற்கும் உரிமம் பெற்ற மின்சார விநியோக நிறுவனத்தால் தொலைதூரத்தில் இருந்து வாசிக்கக்கூடிய Smart Meter பொருத்தப்பட வேண்டும்.
• EDL நிறுவனம் தனத