30/10/2025
தற்போது Jaffna மாவட்டத்தின் சனத்தொகை 6 லட்சம் .வடமராட்சியில் ஒன்றரை லட்சம் சனத்தொகை நெல்லியடி இல் 40 ஆயிரம் 💥இலங்கை சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 பேர் (21.7 millions)
🙏"சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024" இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாவது வாரம் வரை மேற்கொள்ளப்பட்டன.
🙏இதன்படி, நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைந்துள்ள போதிலும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.
🙏மாகாண ரீதியான மக்கள் தொகை பரம்பல்:
🙏இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 28.1% உடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
🙏மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.
🙏மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரம்பலை எடுத்துக்கொண்டால்:
🙏கம்பஹா (2,433,685) 2.4 millions (24 இலட்சத்து 33 ஆயிரம்
🙏 கொழும்பு (2,374,461) 2.3 millions (23 இலட்சத்து 74 ஆயிரம்
🙏குருநாகல் (1,760,829) 1.7 millions (17 இலட்சத்து 60 ஆயிரம்
🙏கண்டி (1,461,269) 1.4 millions ( 14 இலட்சத்து 61 ஆயிரம்
🙏களுத்துறை (1,305,552) 1.3 millions (13 இலட்சத்து 5 ஆயிரம்
🙏இரத்தினபுரி (1,145,138) 1.1 millions (11 இலட்சத்து 45 ஆயிரம்
🙏காலி (1,096,585) 1.09 millions (10 இலட்சத்து 96 ஆயிரம்
🙏இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
🙏முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் நாட்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.
#யாழ்ப்பாணம் - 594,751
வளர்ச்சி வீதம்:
🙏அதிகபட்ச சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமான 2.23% முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
🙏மிகக் குறைந்த சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமானது வவுனியா மாவட்டத்தில் 0.01% ஆகப் பதிவாகியுள்ளது.