Construction World

Construction World Construction World is the Best Construction Company in Theni District. We construct more than 200 p Our motto is "We made your dream as real".

We are the most popular construction contractor in Theni district. We do the construction work of residential and commercial building as per customer's dream.

DTCP Approval என்றால் என்ன?.DTCP என்பது Directorate of Town and Country Planning எனப்படும் நகராட்சி மற்றும் கிராம வளர்ச்...
24/02/2026

DTCP Approval என்றால் என்ன?.
DTCP என்பது Directorate of Town and Country Planning எனப்படும் நகராட்சி மற்றும் கிராம வளர்ச்சி இயக்குநரகம் என்பதின் சுருக்கமாகும்.

DTCP Approval என்றால், ஒரு நிலம் அல்லது வீட்டு திட்டம் DTCP ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்.

அதாவது, அந்த நிலம் சட்டப்படி பயனளிக்கத் தகுதியானது என்றும், நகரமைப்பு திட்டங்களுக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டிருக்கிறது என்றும் பொருள்.

DTCP அங்கீகரிப்பு என்பது ஏன் முக்கியம்?
இன்றைய நில விரிவாக்க திட்டங்களில் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன.
அதனால்தான் DTCP approval என்பது மிகவும் முக்கியமானது.
இது ஒரு நிலம் அல்லது வீடு சட்டப்படி வாங்க தகுதியுடையதா? என்பதை உறுதி செய்யும்.

DTCP அங்கீகரிப்பின் நன்மைகள் என்ன?
சட்டபூர்வமான நிலம்
DTCP-இல் அங்கீகரிக்கப்பட்ட நிலம் முழுமையான சட்ட அனுமதிகளுடன் இருக்கும். பின் நாட்களில் உரிமை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

வங்கி கடன் வசதி
DTCP approval உள்ள நிலத்திற்கு பெரும்பாலான வங்கிகள் ஹவுசிங் லோன் வழங்கும். இது உங்கள் முதலீட்டுக்கு ஆதரவாக இருக்கும்.

அமைப்பு வசதிகள்
அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் சாலை, சDrainage, Street Lights, Park ஆகியவை கட்டாயமாக இருக்கும்.

முன்னேற்ற வாய்ப்பு
நகராட்சி திட்டங்களுடன் இணைக்கப்பட்ட இருப்பதால், எதிர்காலத்தில் அந்த பகுதி விரைவாக வளர்ச்சி பெறும்.

முன்னேற்றமான முதலீடு
DTCP அங்கீகாரம் பெற்ற நிலங்கள் மீதான நிலுவை மதிப்பு (resale value) அதிகமாக இருக்கும்.

DTCP Approval Number / Layout Number என்றால் என்ன?
DTCP ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற Layout Number வழங்கும்.
உதாரணமாக, “DTCP No: 123/2023” என்றதாக இருக்கும். இந்த Layout Number-ஐ வைத்து அந்த திட்டம் நிஜமாக DTCP அங்கீகரிக்கப்பட்டதா என இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

தமிழ்நாடு DTCP இணையதளம்
DTCP Approval இல்லாமல் நிலம் வாங்கலாமா?
அது மிகவும் ஆபத்தானது.
DTCP approval இல்லாத நிலங்களை வாங்கினால்:
சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்
வங்கி கடன்கள் கிடைக்காது
அபிவிருத்தி (development) தேவையற்ற இடத்தில் நடைபெற வாய்ப்பு

DTCP Approval-ஐ எப்படி சரிபார்ப்பது?
நிலத்திற்கு வழங்கப்பட்ட DTCP Layout Number-ஐ விற்பனையாளரிடம் கேட்டறியுங்கள்.
அந்த எண்ணை DTCP இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

அங்கு அந்த திட்டம் அங்கீகாரம் பெற்றதா, எப்போது அங்கீகரிக்கப்பட்டது, எந்த பகுதிக்குள் வருகிறது என்பதைக் காணலாம்.

DTCP Approval மற்றும் CMDA Approval – இரண்டின் வித்தியாசம்
அம்சம் DTCP Approval CMDA Approval
பூர்விகம் கிராமப்புறங்கள்,
நகர வளர்ச்சிப் பகுதிகள் சென்னை மாநகரப் பகுதி
நிறுவனம் Town and Country Planning Directorate Chennai Metropolitan Development Authority
பயன்பாடு பெரும்பாலும் மாவட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் சென்னை மற்றும் சுற்றுப்புறங்கள்
DTCP Approval
1. DTCP approval இல்லாத நிலம் வாங்கலாமா?
மிகவும் ஆபத்தானது. சட்ட பிரச்சனைகளுக்கு இடமளிக்கலாம்.

2. DTCP approval என்றால் வங்கி கடன் கிடைக்குமா?
ஆம். பெரும்பாலான வங்கிகள் DTCP approved layout-க்கு கடன் வழங்கும்.

3. DTCP அங்கீகரிப்பு எப்போது தேவை?
நீங்கள் வாடகைக்கு இல்லாமல் நிலம் அல்லது வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ விரும்பும்போது அவசியம் DTCP approval வேண்டும்.
DTCP Approval என்பது உங்கள் நில வாங்கும் முடிவிற்கு சட்டபூர்வமான பாதுகாப்பு அளிக்கிறது.

இது உங்கள் முதலீட்டுக்கு மதிப்பு சேர்க்கும் ஒரு முக்கியமான ஆவணம். எனவே, நிலம் வாங்கும் முன், DTCP அங்கீகரிப்பு பெற்றதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Construction World
073730 10050

🍳 கிச்சன் மேடை (Countertop): கிரானைட் நல்லதா? டைல்ஸ் நல்லதா?​வணக்கம்!​சமையலறை மேடை அமைக்கும்போது, சிலர் அழகிற்காகவோ அல்ல...
11/02/2026

🍳 கிச்சன் மேடை (Countertop): கிரானைட் நல்லதா? டைல்ஸ் நல்லதா?
​வணக்கம்!
​சமையலறை மேடை அமைக்கும்போது, சிலர் அழகிற்காகவோ அல்லது செலவை குறைக்கவோ டைல்ஸ் (Tiles) ஒட்ட நினைக்கிறார்கள். இது சரியான முடிவா?
​1. டைல்ஸ் (Tiles / GVT): ❌
​பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் சமையலறைக்கு இது செட் ஆகாது.
​பிரச்சனை: சூடான குக்கர் அல்லது பாத்திரத்தை நேரடியாக டைல்ஸ் மீது வைத்தால், அந்த வெப்பம் தாங்காமல் டைல்ஸ் வெடித்துவிடும் (Crack) வாய்ப்பு அதிகம்.
​டைல்ஸ் இடுக்குகளில் (Joints) உணவுத் துகள்கள் சிக்கிக்கொண்டால் சுத்தம் செய்வது கடினம்.
​2. கிரானைட் (Granite): ✅
​இது இயற்கையான கல். எவ்வளவு சூடான பாத்திரத்தை வைத்தாலும் தாங்கும்.
​கீறல் விழாது (Scratch Proof).
​சுத்தம் செய்வதற்கு மிகவும் எளிது.
​எங்களின் ஆலோசனை (Expert Tip): 🧐
சமையலறை மேடைக்கு எப்போதும் கருப்பு கிரானைட் (Black Granite) அல்லது அடர் நிற கிரானைட் பயன்படுத்துவதே சிறந்தது.
​எண்ணெய் கறையோ, மஞ்சள் கறையோ பட்டாலும் தெரியாது.
​வெளிர் நிறம் (Light Color) பயன்படுத்தினால், காலப்போக்கில் கறை படித்து அதன் நிறம் மாறிவிடும்.
​நீண்ட காலம் உழைக்கும் உறுதியான சமையலறைக்கு கிரானைட்டே பெஸ்ட்! 💪
​தரமான கட்டுமான ஆலோசனைகளுக்கு எங்களை அணுகுங்கள்!
​📞 தொடர்புக்கு: 7373010050
📍 Construction World, சின்னமனூர்.
​எங்களை சோஷியல் மீடியாவில் பின்தொடர: 👇
​✅ WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Vb7EAWA1nozAdMR4AM0Z
​📸 Instagram:
​👍 Facebook:

🍳 மாடுலர் கிச்சன் (Modular Kitchen) vs தச்சு வேலை: எது பெஸ்ட்?​வணக்கம்!​புதிதாக வீடு கட்டும்போது, "கிச்சனை எப்படி அமைப்ப...
10/02/2026

🍳 மாடுலர் கிச்சன் (Modular Kitchen) vs தச்சு வேலை: எது பெஸ்ட்?
​வணக்கம்!
​புதிதாக வீடு கட்டும்போது, "கிச்சனை எப்படி அமைப்பது?" என்ற கேள்வி எல்லோருக்கும் வரும்.
​1. ரெடிமேட் மாடுலர் கிச்சன் (Factory Made): ✨
​நன்மை: பார்ப்பதற்கு மிக அழகாக, பளபளப்பாக இருக்கும். விதவிதமான டிசைன்களில் கிடைக்கும்.
​கவனம்: இதில் பயன்படுத்தப்படும் பலகை MDF அல்லது Particle Board ஆக இருந்தால், தண்ணீர் பட்டாலே ஊறிப்போய் வீங்கிவிடும். ஆயுள் குறைவு.
​2. தச்சு வேலை (Carpenter Work): 🔨
​நன்மை: நம் இடத்திற்கு ஏற்றவாறு,த் தரமான மரத்திலோ அல்லது பிளைவுட்டிலோ (Plywood) செய்து கொள்ளலாம். மிகவும் உறுதியானது.
​கவனம்: பழைய முறைப்படி வெறும் கப்போர்டு (Cupboard) மட்டும் அடித்தால், பொருட்களை எடுக்கவும் வைக்கவும் சிரமமாக இருக்கும்.
​எங்களின் ஆலோசனை (Expert Tip): ✅
இரண்டையும் கலந்து "செமி-மாடுலர்" (Semi-Modular) செய்வதுதான் புத்திசாலித்தனம்!
​ஃப்ரேம் (Frame): உள்ளே இருக்கும் ஃப்ரேமை தரமான BWP (Boiling Water Proof) மரைன் பிளைவுட்டில் தச்சரை வைத்து அடியுங்கள். இது தண்ணீரில் ஊறியாக்லும் எதுவும் ஆகாது.
​கூடை (Baskets): பாத்திரங்களை வைக்க, பிளைவுட் அலமாரிக்குப் பதிலாக SS 304 கிரேடு ஸ்டீல் கூடைகளை (Steel Baskets) வாங்கி மாட்டுங்கள். (சாதாரண ஸ்டீல் வாங்கினால் துருப்பிடித்துவிடும், 304 கிரேடுதான் சிறந்தது).
​இது உங்களுக்கு உறுதியையும் தரும், மாடுலர் லுக்கையும் தரும்! 💯
​நீண்ட காலம் உழைக்கும் நவீன சமையலறையை அமைக்க எங்களை அணுகுங்கள்!
​📞 தொடர்புக்கு: 7373010050
📍 Construction World, சின்னமனூர்.
​எங்களை சோஷியல் மீடியாவில் பின்தொடர: 👇
​✅ WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Vb7EAWA1nozAdMR4AM0Z
​📸 Instagram:
https://www.instagram.com/consworldcmr?igsh=Z2J2Ynd3aHJraHl0
​👍 Facebook:
https://www.facebook.com/consworldcmr

10/02/2026

Wow it's the reason for the manhole in round size.

10/02/2026

Building the future of healthcare, one block at a time. 🏥 Today’s progress report: AAC Block masonry work in full swing at the hospital site. Committed to precision and speed. 🏗️
Executed by: Construction World

DailyConstruction

06/02/2026

🔌 இன்வெர்ட்டர் வயரிங்: சுவர் அழகைக் கெடுக்காமல் இருப்பது எப்படி?
​வணக்கம்!
​பல வீடுகளில் கவனித்திருப்பீர்கள், பெயிண்டிங் எல்லாம் முடிந்து சூப்பராக இருக்கும். ஆனால், சுவற்றின் குறுக்கே வெள்ளை நிறத்தில் பிளாஸ்டிக் பைப் (Casing Patti) அடித்திருப்பார்கள்.
​காரணம் என்ன? இன்வெர்ட்டர் வயரிங் முன்கூட்டியே செய்யாததுதான்.
​வீடு கட்டி முடித்த பிறகு இன்வெர்ட்டர் வாங்கும்போது, வயர் இழுக்க வழி இருக்காது. அதனால் சுவரைத் துளைத்தோ அல்லது வெளியிலோ வயர் இழுப்பார்கள்.
​இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 🛠️
​தனி லைன் (Inverter Loop): எலக்ட்ரிக்கல் பைப் பதிக்கும்போதே (Conduit Piping), மெயின் போர்டில் இருந்து ஒவ்வொரு அறைக்கும் இன்வெர்ட்டருக்கென தனியாக ஒரு வயரை (Inverter Return Wire) இழுத்துவிடச் சொல்லுங்கள்.
​நியூட்ரல் வயர்: சில எலக்ட்ரீஷியன்கள் சிக்கனத்திற்காக நியூட்ரல் வயரை (Neutral Wire) பொதுவாக பயன்படுத்துவார்கள். ஆனால், இன்வெர்ட்டருக்கு தனி நியூட்ரல் வயர் இழுப்பதே பாதுகாப்பானது. இது லைட் மின்னுவதை (Flickering) தடுக்கும்.
​எங்களின் ஆலோசனை (Expert Tip): ✅
எல்லா பிளக் பாயிண்டுகளுக்கும் இன்வெர்ட்டர் கனெக்ஷன் கொடுக்காதீர்கள்.
​ஃபேன் மற்றும் லைட் பாயிண்டுகளுக்கு மட்டும் கொடுங்கள்.
​மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற ஹெவி பவர் பாயிண்டுகளுக்கு இன்வெர்ட்டர் கனெக்ஷன் வேண்டாம். இது உங்கள் பேட்டரி ஆயுளைக் குறைத்துவிடும்.
​திட்டமிட்டு வயரிங் செய்ய எங்களை அணுகுங்கள்!
​📞 தொடர்புக்கு: 7373010050
📍 Construction World, சின்னமனூர்.
​எங்களை சோஷியல் மீடியாவில் பின்தொடர: 👇
​✅ WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Vb7EAWA1nozAdMR4AM0Z
​📸 Instagram:
https://www.instagram.com/consworldcmr?igsh=Z2J2Ynd3aHJraHl0
​👍 Facebook:
https://www.facebook.com/constructionworldtheni/

🔌 இன்வெர்ட்டர் வயரிங்: சுவர் அழகைக் கெடுக்காமல் இருப்பது எப்படி?​வணக்கம்!​பல வீடுகளில் கவனித்திருப்பீர்கள், பெயிண்டிங் எ...
06/02/2026

🔌 இன்வெர்ட்டர் வயரிங்: சுவர் அழகைக் கெடுக்காமல் இருப்பது எப்படி?
​வணக்கம்!
​பல வீடுகளில் கவனித்திருப்பீர்கள், பெயிண்டிங் எல்லாம் முடிந்து சூப்பராக இருக்கும். ஆனால், சுவற்றின் குறுக்கே வெள்ளை நிறத்தில் பிளாஸ்டிக் பைப் (Casing Patti) அடித்திருப்பார்கள்.
​காரணம் என்ன? இன்வெர்ட்டர் வயரிங் முன்கூட்டியே செய்யாததுதான்.
​வீடு கட்டி முடித்த பிறகு இன்வெர்ட்டர் வாங்கும்போது, வயர் இழுக்க வழி இருக்காது. அதனால் சுவரைத் துளைத்தோ அல்லது வெளியிலோ வயர் இழுப்பார்கள்.
​இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 🛠️
​தனி லைன் (Inverter Loop): எலக்ட்ரிக்கல் பைப் பதிக்கும்போதே (Conduit Piping), மெயின் போர்டில் இருந்து ஒவ்வொரு அறைக்கும் இன்வெர்ட்டருக்கென தனியாக ஒரு வயரை (Inverter Return Wire) இழுத்துவிடச் சொல்லுங்கள்.
​நியூட்ரல் வயர்: சில எலக்ட்ரீஷியன்கள் சிக்கனத்திற்காக நியூட்ரல் வயரை (Neutral Wire) பொதுவாக பயன்படுத்துவார்கள். ஆனால், இன்வெர்ட்டருக்கு தனி நியூட்ரல் வயர் இழுப்பதே பாதுகாப்பானது. இது லைட் மின்னுவதை (Flickering) தடுக்கும்.
​எங்களின் ஆலோசனை (Expert Tip): ✅
எல்லா பிளக் பாயிண்டுகளுக்கும் இன்வெர்ட்டர் கனெக்ஷன் கொடுக்காதீர்கள்.
​ஃபேன் மற்றும் லைட் பாயிண்டுகளுக்கு மட்டும் கொடுங்கள்.
​மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற ஹெவி பவர் பாயிண்டுகளுக்கு இன்வெர்ட்டர் கனெக்ஷன் வேண்டாம். இது உங்கள் பேட்டரி ஆயுளைக் குறைத்துவிடும்.
​திட்டமிட்டு வயரிங் செய்ய எங்களை அணுகுங்கள்!
​📞 தொடர்புக்கு: 7373010050
📍 Construction World, சின்னமனூர்.
​எங்களை சோஷியல் மீடியாவில் பின்தொடர: 👇
​✅ WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Vb7EAWA1nozAdMR4AM0Z
​📸 Instagram:
https://www.instagram.com/consworldcmr?igsh=Z2J2Ynd3aHJraHl0
​👍 Facebook:
https://www.facebook.com/constructionworldtheni/

🎉 Grand New Office Opening! 🎉Construction World is thrilled to announce the opening of our new office in Chinnamanur.Wit...
31/01/2026

🎉 Grand New Office Opening! 🎉

Construction World is thrilled to announce the opening of our new office in Chinnamanur.

With over 30 years of experience in civil engineering and construction, we have upgraded our space to serve you better. We warmly invite you to visit our new office to discuss your dream projects, consulting needs, and building contracts.

"Your Dream Home Comes True"

Please consider this as a personal invitation to drop by, bless our new space, and have a cup of tea with us.

📍 Location: Construction World Near Viruthunagar Nadarkal Uravinmurai Pettai, Chinnamanur, Theni District
📞 Contact: Er. Karthikeyan 7373010050

✨ ஃபால்ஸ் சீலிங் (False Ceiling): ஜிப்சம் vs PVC - எது சிறந்தது?​வணக்கம்!​வீட்டின் அழகைக் கூட்ட ஃபால்ஸ் சீலிங் அமைப்பது ...
31/01/2026

✨ ஃபால்ஸ் சீலிங் (False Ceiling): ஜிப்சம் vs PVC - எது சிறந்தது?
​வணக்கம்!
​வீட்டின் அழகைக் கூட்ட ஃபால்ஸ் சீலிங் அமைப்பது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. இதில் ஜிப்சம் (Gypsum) மற்றும் PVC என இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
​எதை எங்கு பயன்படுத்த வேண்டும்?
​1. ஜிப்சம் போர்டு (Gypsum Board): 🏠
​பினிஷிங்: இது மிகவும் நேர்த்தியான (Smooth), தடையற்ற தோற்றத்தைத் தரும்.
​சிறப்பு: வெப்பத்தைக் குறைக்கும் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் எளிதில் தீ பிடிக்காது (Fire Resistant).
​எங்கு போடலாம்? ஹால் (Hall) மற்றும் பெட்ரூம் (Bedroom) போன்ற இடங்களுக்கு இதுவே சிறந்தது. பார்க்க "ராயல் லுக்" கொடுக்கும்.
​2. PVC பேனல் (PVC Panel): 💧
​பினிஷிங்: இது பிளாஸ்டிக் வகையைச் சார்ந்தது. பார்ப்பதற்கு செயற்கையாகத் தெரியும்.
​சிறப்பு: தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது (Waterproof). விலை குறைவு.
​எங்கு போடலாம்? பாத்ரூம், பால்கனி அல்லது ஈரம் அதிகம் உள்ள இடங்களுக்கு இது சிறந்தது.
​எங்களின் ஆலோசனை (Expert Tip): ✅
வீட்டின் முக்கிய அறைகளுக்கு (Living Room) ஜிப்சம் போடுவதே சிறந்தது. ஈரம் படும் இடங்களுக்கு மட்டும் PVC பயன்படுத்துங்கள்.
​இதுபோன்ற இன்டீரியர் ஆலோசனைகளுக்கு எங்களை அணுகுங்கள்!
​📞 தொடர்புக்கு: 7373010050
📍 Construction World, சின்னமனூர்.
​எங்களை சோஷியல் மீடியாவில் பின்தொடர: 👇
​✅ WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Vb7EAWA1nozAdMR4AM0Z
​📸 Instagram:
https://www.instagram.com/consworldcmr?igsh=Z2J2Ynd3aHJraHl0
​👍 Facebook:
https://www.facebook.com/constructionworldtheni/

🛁 பாத்ரூம் டைல்ஸ்: அழகு முக்கியமா? பாதுகாப்பு முக்கியமா?வணக்கம்!வீட்டுக்கு டைல்ஸ் தேர்ந்தெடுக்கும் போது, ஹாலில் (Hall) ப...
30/01/2026

🛁 பாத்ரூம் டைல்ஸ்: அழகு முக்கியமா? பாதுகாப்பு முக்கியமா?

வணக்கம்!

வீட்டுக்கு டைல்ஸ் தேர்ந்தெடுக்கும் போது, ஹாலில் (Hall) போடும் அதே பளபளப்பான (Glossy) டைல்ஸை பாத்ரூம் தரைக்கும் வாங்கிப் போடுவது மிகப்பெரிய தவறு.

ஏன்? ⚠️ பளபளப்பான டைல்ஸில் தண்ணீர் மற்றும் சோப்பு நுரை சேரும்போது, அது கண்ணாடி போல வழுக்கும் (Slippery). இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வழுக்கி விழும் ஆபத்து மிக அதிகம்.

எது சிறந்தது? ✅ பாத்ரூம் தரைக்கு எப்போதும் "மேட் ஃபினிஷ்" (Matte Finish) அல்லது "ஆன்டி-ஸ்கிட்" (Anti-Skid) டைல்ஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இது சற்று சொரசொரப்பாக இருப்பதால், ஈரம் இருந்தாலும் கால்களுக்குப் பிடிப்பை (Grip) தரும்.

வழுக்கி விழும் அபாயத்தைக் குறைக்கும்.

எங்களின் ஆலோசனை (Expert Tip): 🧐

சுவர்களுக்கு (Walls): பளபளப்பான (Glossy) டைல்ஸ் ஒட்டலாம். (அழுக்கு சேராது, சுத்தம் செய்வது சுலபம்).

தரைக்கு (Floor): கண்டிப்பாக ஆன்டி-ஸ்கிட் (Matte) டைல்ஸ் மட்டுமே போட வேண்டும்.

அழகை ரசிப்போம், ஆபத்தைத் தவிர்ப்போம்! 🛡️

பாதுகாப்பான முறையில் வீட்டைக் கட்ட எங்களை அணுகுங்கள்!

📞 தொடர்புக்கு: 7373010050 📍 Construction World, சின்னமனூர். Theni.

For More Details : https://whatsapp.com/channel/0029Vb7EAWA1nozAdMR4AM0Z







🚿 ஹீட்டருக்கு (Water Heater) வெள்ளை கலர் PVC பைப் போடலாமா?வணக்கம்!"எல்லாமே பிளாஸ்டிக் பைப்தானே, வெள்ளை பைப்பையே ஹீட்டருக...
30/01/2026

🚿 ஹீட்டருக்கு (Water Heater) வெள்ளை கலர் PVC பைப் போடலாமா?

வணக்கம்!

"எல்லாமே பிளாஸ்டிக் பைப்தானே, வெள்ளை பைப்பையே ஹீட்டருக்கும் போட்டுவிடலாம்" என்று சிலர் நினைப்பார்கள். இது மிகப்பெரிய தவறு! 🚫

குழாய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:

PVC (Polyvinyl Chloride): இது குளிர்ந்த நீருக்கு (Cold Water) மட்டும் பயன்படுத்த வேண்டியது.

CPVC (Chlorinated PVC): இது சுடு நீருக்கு (Hot Water) பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது.

ஏன் PVC பயன்படுத்தக்கூடாது? 🔥 சாதாரண வெள்ளை PVC குழாய்களால் 60°C டிகிரிக்கு மேல் வெப்பத்தைத் தாங்க முடியாது. ஹீட்டரிலிருந்து வரும் அதிக சூடான நீர் அதில் பாயும்போது:

பைப் உருகி வளையலாம்.

ஜாயிண்ட்களில் (Joints) பசை இளகி லீக்கேஜ் ஏற்படும்.

நீண்ட காலத்தில் பைப் வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

எங்களின் ஆலோசனை (Expert Tip): ✅ ஹீட்டர் லைனுக்கு எப்போதும் CPVC பைப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள். இவை சுமார் 93°C வரை வெப்பத்தைத் தாங்கும்.

எப்படிக் கண்டுபிடிப்பது? 🧐

PVC பைப் நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும்.

CPVC பைப் சற்று மஞ்சள் கலந்த வெள்ளை (Yellowish) நிறத்தில் இருக்கும், அல்லது அதில் ஒரு சிவப்பு/மஞ்சள் கோடு போட்டிருக்கும்.

சரியான பொருட்களைத் தேர்வு செய்ய எங்களை அணுகுங்கள்!

📞 தொடர்புக்கு: 7373010050 📍 Construction World, சின்னமனூர். Theni





For More Details : https://whatsapp.com/channel/0029Vb7EAWA1nozAdMR4AM0Z

Address

67/1 North Car Street
Chinnamanur
625515

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

7373010050

Website

http://mybricks.in/, http://worldconstruction.net/

Alerts

Be the first to know and let us send you an email when Construction World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Construction World:

Share