Nano Foam Technology Pvt Ltd

Nano Foam Technology Pvt Ltd We are The manufacturers Of CLC Block making machine, Clc foam generator, Foam concrete machine, Foam block machine, light weight brick machine, Clc plant

Nano Foam Technology is leading Exporter, Manufacturer, Supplier, Trading Company of Construction Machinery in India. Nano Foam Technology is one of Trade India's verified and trusted sellers of listed products. With their extensive experience of supplying and trading Foam Concrete Block Machine, We made a reputed name for themselves in the market with high quality Foam Concrete Block Machine, Foa

m Concrete Machinery,CLC Machine, Clc Foam Generators, Clc Bricks, Clc Mixer, etc. Focusing on a customer centric approach, Nano Foam Technology has a pan-India presence and caters to a huge consumer base throughout the country.

https://www.youtube.com/watch?v=5i3AjsP9eHw
08/11/2025

https://www.youtube.com/watch?v=5i3AjsP9eHw

Benefits of Foam Concrete Work After Waterproofing Treatment1. Enhanced Durability: Foam concrete work after waterproofing treatment enhances the durability ...

02/09/2022

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் தவிர்க்க இயலாத மூலப்பொருள் செங்கல். சூளைகளில் தயாரிக்கப்படும் செங்கல்தான் நெடுங்காலமாகக் கட்டுமானத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுவந்தது. இதனால், மண் மற்றும் விறகுத் தட்டுப்பாடு, காற்று மாசுபாடு போன்ற பல்வேறு சிக்கல்கள் உருவாகின. அதன்பிறகு பல்வேறு புதிய ரக செங்கல்கள் பிரபலமாகின. அந்த வரிசையில், குறைந்த எடையில், அதிக பயன்களுடன், கட்டுமானத்தில் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் சி.எல்.சி (Celler Lightweight Concrete) ப்ரிக்ஸ் மற்றும் பிளாக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தக் கற்களைத் தயாரிக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

சி.எல்.சி ப்ரிக்ஸ் என்றால் என்ன?

சூளை செங்கல் மற்றும் சாம்பல் செங்கல் போலவே இதுவும் கட்டுமானத்துக்கு உதவும் ஒருவகையான மூலப்பொருள். சிமென்ட், ஜல்லி, மணல், நீர் ஆகியவற்றைச் சேர்ந்து கான்கிரீட் கலவையைத் தயாரிப்பது போலவேதான், இதன் தயாரிப்பு முறையும். ஆனால், இந்தக் கலவையில், மணல் மற்றும் ஜல்லிக்குப் பதிலாக, நிலக்கரி சாம்பலும், Foam எனப்படும் நுரை சேர்மானம் (கல்லின் எடையைக் குறைக்கவும் வலிமையைக் கூட்டவும் உதவுகிறது) சேர்க்கப்பட்டு, சி.எல்.சி ப்ரிக்ஸ் தயாரிக்கப்படுகிறது. இவை பல செங்கல்களை ஒன்றாக அடுக்கி வைத்தது போல கனசதுர (Cuboid) வடிவத்தில் இருக்கும். இவற்றைத் தேவையான வடிவங்களில் தயாரித்து, தேவைக்கேற்ப கட் செய்து பயன் படுத்தலாம்.

கட்டுமானத்துக்கு உதவும்
மிதக்கும் கற்கள்..!
எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

குடியிருப்பு மற்றும் நிறுவன கட்டுமானங்கள், தொட்டி மற்றும் குளம் உள்ளிட்ட பள்ளமான பகுதிகளை மூடுவதற்கான தளமாக, ஒலி ஊடுருவாத வகையில் அறைகளை உருவாக்க, அறையின் உள்வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பது, அறைக்குள் எளிதான முறையில் தடுப்பு அமைப்பது, வால் பேனல், ஃபால்ஸ் சீலிங், சிலை வடிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சி.எல்.சி கற்களைப் பயன் படுத்தலாம். இந்தக் கற்களின் எடை குறைவு என்பதால், கட்டடத்தின் உள் அறைப் பயன்பாடுகளுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் செலவு களையும் கணிசமாகக் குறைக்கலாம்.

30% செலவுகளைக் குறைக்கலாம்!

இந்தக் கற்கள், நீரை உறிஞ்சினாலும் அதைத் தனக்குள் வைத்துக்கொள்ளாமல் வெளியேற்றிவிடும். இதனால், சி.எல்.சி கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கட்டுமானங் களில் விரிசல் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. சி.எல்.சி கற்களைப் பயன்படுத்துவதன் மூலம், செங்கல், சிமென்ட் கலவை, நீர், பணியாளர் திறன் உட்பட பலவிதத்திலும் 30% வரை செலவினங்களைக் குறைக்கலாம். இந்தக் கற்களைக் கொண்டு கட்டப்படும் கட்டுமானங்களின் ஆயுள்திறன் அதிகம். 1,000 Kg/m3 அடர்த்திக்குக் கீழுள்ள இந்தக் கற்கள் நீரில் மிதக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானத்துக்கு உதவும்
மிதக்கும் கற்கள்..!
தயாரிப்பு முறை

ரோட்டரி இயந்திரத்தில், தண்ணீர், ஃப்ளை ஆஷ் மற்றும் சிமென்ட் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். திரவ வடிவத்திலிருக்கும் இந்தக் கலவை Slurry எனப்படும்.1 லிட்டர் CLC Foaming consentrate-க்கு 20 - 25 லிட்டர் நீர் சேர்க்க வேண்டும் (நீரின் TDS அளவுக்கு ஏற்ப நீரின் அளவு மாறும்). இது Foam Concentrate எனப்படும். ஒரு க்யூபிக் மீட்டர் அளவுக்கு சி.எல்.சி கலவையைத் தயாரிக்க, 1.2 கிலோ ஃபோமிங் கான்சென்டிரேட்டுக்கு 30 - 35 லிட்டர் நீர் சேர்த்து ஃபோம் ஜெனரேட்டர் இயந்திரத்தின் மூலம் நுரைத்திறனை (Foam) உருவாக்க வேண்டும். இதை, தயாராக வைத்திருக்கும் Slurry கலவையில் சேர்க்க வேண்டும். பயன்பாட்டுத் தேவைக்கேற்ப இந்தக் கலவையின் அடர்த்தியை நிர்ணயிக்கலாம். உதாரணத்துக்கு, குடியிருப்புக் கட்டுமானத்துக்குக் கலவையின் அடர்த்தி 850 - 900 Kg/m3 இருக்க வேண்டும். அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட Slurry கலவையை, குழாய் வழியே டிராலியில் நிரப்ப வேண்டும். பின்னர், அச்சுக்குடுவையில் கலவையை நிரப்பி திறந்த வெளியில் ஒருநாள் முழுக்க உலர்த்த வேண்டும். கற்கள் உலர்ந்துபோவதைத் தவிர்க்க, தினமும் அவற்றின்மீது நீரை ஸ்பிரே செய்ய வேண்டும். இப்படியே 26 தினங்களுக்கு வைத்திருந்த பின்னர், கற்களை விற்பனைக்கு அனுப்பலாம்.

கட்டுமானத்துக்கு உதவும்
மிதக்கும் கற்கள்..!
சிறப்பம்சங்கள்...

சி.எல்.சி கற்கள் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் தடையின்றி கிடைக்கின்றன. இந்தக் கற்கள் தயாரிப்பும் பயன்பாடும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. இந்த வகை கற்களுக்கு, அறைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒலியைக் கடத்தும் திறன் குறைவு. வெப்பநிலையைச் சமன்படுத்தும் திறன் அதிகம். இதனால், இவற்றின் கோடையில் அதிக வெப்பம் உள்ளே நிலவாது; குளிர்காலத்தில் அதிக குளிர்ச்சியையும் கிரகிக் காது. இந்த வகை கற்கள் எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டவை.

கட்டுமானத்துக்கு உதவும்
மிதக்கும் கற்கள்..!
விற்பனை வாய்ப்பு

சி.எல்.சி கற்களைப் பயன்படுத்து வதால் கட்டுமானப் பணிகளை வேகமாக முடிக்கலாம். அடுக்கு மாடிக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் போன்ற பெரிய கட்டுமானங்களுக்கு சி.எல்.சி கற்களின் பயன்பாடு அதிகம் உதவும் என்பதால், அத்தகைய கட்டுமானப் பணிகளை மேற் கொள்வோர் மற்றும் பில்டர்களின் நட்பை வலுப்படுத்தி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கலாம்.

வங்கிக் கடனுதவி!

பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (PMEGP) 22.80 லட்சம் ரூபாய் கடனுடன் (Term Loan), 25% (6 லட்சம் ரூபாய்) மானியமும் பெறலாம்.

மாதத்துக்கு ரூ.22,27,500 டேர்ன்ஓவர்!

இந்த புராஜெக்ட் மதிப்பீட்டின்படி, தினமும் 30 க்யூபிக் மீட்டர் அளவுக்குக் கற்களை உற்பத்தி செய்யலாம். ஒரு க்யூபிக் மீட்டருக்கு 55 கற்கள் வீதம், 30 க்யூபிக் மீட்டருக்கு 1,650 கற்களை உற்பத்தி செய்ய முடியும். அந்த வகையில், ஒரு மாதத்தில் 15 தினங்களுக்கு உற்பத்தியை மேற்கொள்ளும் பட்சத்தில், 24,750 கற்களைத் தயாரிக்கலாம். ஒரு கல்லுக்குத் தோராயமாக 90 ரூபாய் விலை அடிப்படையில், 24,750 கற்களுக்கு 22,27,500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

Address

10/23, Christian Street, K. G. Chavady
Coimbatore
641105

Alerts

Be the first to know and let us send you an email when Nano Foam Technology Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share