14/09/2025
அனைவருக்கும் வணக்கம்.
வருகின்ற வாஸ்து நாள் - 28-10-2025 ( ஐப்பசி 11 ) செவ்வாய்க்கிழமை
காலை - 07.44 AM - 08.20 AM
🏠 தமிழகம் , கர்நாடகா, புதுச்சேரி முழுவதும் கட்டுமான பணியை உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப உங்கள் தேவைக்கு தகுந்தார் போல் வடிவமைத்து கொடுக்கும் நிறுவனம் SRI KRV CONSTRUCTIONS
கட்டுமான பணிக்கு முன்பே கட்டுமானத்தின் அமைப்பு பொலிவு ஆகியவற்றை ஒலி ஒளியின் மூலம் பார்வைக்கு ஏற்பாடு செய்து வாடிக்கையாளன் பார்வைக்கு கொடுக்கப்பட்டு பின் கட்டுமான பணி தொடக்கப்படும்.
எங்கள் நிறுவனம் தமிழக அரசு ஒப்பந்த பணி மற்றும் தனியார் கட்டுமானங்களை எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக மக்களின் நல் ஆதரவு பெற்று தொடர்ந்து பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
#எங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரம் (தரமான கட்டுமானம், நம்பகத்தன்மை, புதுமை, செயல்திறன், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் பாதுகாப்பு.)
#கூடிய விரைவில் தர்மபுரி நகரத்திலும், தமிழகத்தின் ஒரு சில மாநகரத்தில் நம் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்க உள்ளது.
எங்கள் கட்டுமான நிறுவனமானது கீழ்க்கண்டவாறு வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்தத்தின் மூலம் வேலையின் தரம் மற்றும் அளவீடு முறையாக வெளிப்படையாக தெரிவிக்கப்படும் ஒப்பந்த பத்திரத்தின் தயாரிக்கப்படும் அதன் மாதிரிகள்.
2025-ம் ஆண்டு ........ மாதம் ....... ம் தேதி .............. மாவட்டம், ........... ........... ............ என்ற முகவரியில் வசித்து வரும் ( கட்டிட உரிமையாளர் ) 1-வது பார்ட்டி
கட்டிடத்தில் செய்ய வேண்டிய விபரங்கள் :
1.அஸ்திவாரம் (Foundation) :
தேவைக்கு ஏற்ப கட்டுமானம் அமையும் நிலத்தின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீள அகலத்தில் குழி எடுக்கப்படும். எடுக்கப்படும் குழி கடினதளம் வரும் வரை ஆழப்படுத்தப்படும் (கடினப்பாறைகள் அல்லது கடினமண் வரும் வரை) PCC 1:5:10 mix-0 15 ஜல்லி கான்கிரீட் போட்டுத்தரப்படும்.
தூண்கள் ஆனது வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப மாடியின் அளவைப் பொறுத்து வடி அமைக்கப்படும் அளவில் பில்லர் நிறுத்தப்பட்டு RCC 1:2:4 mix-ல் ஜல்லி கான்கிரீட் புட்டிங் போட்டுத்தரப்படும்.
2. கட்டிடத்தின் தளம் (Basement) :
கட்டிடத்தின் தளம் (Basement) உயரம் நிலமட்டத்திலிருந்து 2 to 3 அடி உயர்த்தப்படும். நில மட்டத்தில் தேவைக்கு ஏற்ப பிளின்த் பீம் கம்பிகட்டி RCC 1:2:4 Mix-ல் 1/4" ஜல்லி கான்கிரீட் போட்டுத்தரப்படும். வீட்டின் நிலமட்டத்திற்கு PCC 1:5:10 Mix-ல் 1 1/2” ஜல்லி கான்கீரீட் போட்டுத்தரப்படும். தேவைப்பட்டால் வாடிக்கையரின் தேவைக்கு ஏற்ப உயரம் உயர்த்தப்படும்.
3. சுவர் வேலை :
கட்டிட சுவர்களின் செங்கல் , பிளே ஆஷ் பிரிக் , சாலிட் பிளாக் 9" ,6" வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப வரைபடத்தில் உள்ளபடி கட்டிக் கொடுக்கப்படும் .
4.மேற்கூரை :
RCC 1:2:4 Mix-ல் 1/4" ஜல்லி கான்கிரீட் 4 1/2" முதல் 4.5 " கணம் வரை போட்டுத்தரப்படும்.
5.வீட்டின் உள் மற்றும் வெளி வேலைகள் :
வெளி உள் சுவர்களுக்கு 1:6 சிமெண்ட் கலவையில் சீலிங் 1:5 சிமெண்ட் கலவையிலும் பூச்சு வேலைச் செய்யப்படும் சமையல் அறை டைனிங் அறை மற்றும் இரண்டு படுக்கை அறை ஒவ்வொன்றிலும் ஒரு அலமாரி கிரானைட் கல்
உபயோகித்து கட்டிக்கொடுக்கப்படும். கைப்பிடி சுவர் கட்டிடத்தை சுற்றி 3 அடி உயரத்திலும், மாடி ஏறும் படிக்கு பூச்சு வேலை செய்தும் கைப்பிடி கிரில் SS இரும்பிலும் செய்து கொடுக்கப்படும்.
6.எலக்ட்ரிக்கல் வேலை :
தரமான ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட ஓயர் ஸ்விட்சு KUNDAN, HIFI
ஹால் :
லைட் பாயிண்ட் - 3, பேன் பாயிண்ட் 2, 5A பிளக் பாயிண்ட்-2, TV பாயிண்ட் - 1.
டெலிபோன் பாயிண்ட்- 1 மற்றும் 30W LED டியுப் லைட்-2.
சமையல் அறை :
லைட் பாயிண்ட் -2, பேன் பாயிண்ட் -1, 5A பிளக் பாயிண்ட் -2, 20W LED டியுப் லைட் -1 மற்றும் 15A பிளக் பாயிண்ட்-2
உணவு அருந்தும் அறை (Dining) :
லைட் பாயிண்ட் - 2, பேன் பாயிண்ட் 1. 20W LED டியுப் லைட் பாயிண்ட் - 1 மற்றும் 15A பிளக் பாயிண்ட் - 1.1, 5A பிளக்
படுக்கை அறை :
லைட் பாயிண்ட் 2. பேன் பாயிண்ட் 1. 20W LED டியுப் லைட் 1. 5A பிளக் பாயிண்ட் - 2 மற்றும் AC (20A) பாயிண்ட் - 1
( இதில் இரண்டு 2-வே பாயிண்டும் அடங்கும் )
குளியல் & கழிவறை :
லைட் பாயிண்ட் - 1 மற்றும் ஹூட்டர் பாயிண்ட் - 1
போர்டிகோ (Portico) :
லைட் பாயிண்ட் - 2, பாயிண்ட் 1, 5A பிளக் பாயிண்ட் - 1,20W LED டியுப் லைட் - 1 மற்றும் வெளிப்புற லைட் பாயிண்ட் - 1
7.பிளம்பிங் வேலை ( Plumbing Work ) :
சுமையலறை :
டேங்க் லைன் - 1 மற்றும் கிச்சன் டேப் -1
குளியல் அறை ( 2Nos ) :
டேங் லைன் - 1 ஹீட்டர் லைன் - 1 ஷவர் - 1 வால் மிக்சர் டேப் ,ஹேல்த் பிளஸ் - 1, கிளாசெட் (EWC Set) வாஷ்பேஷன் ,மற்றும் வாஷ்பேஷன் டேப் -1
8. கதவு மற்றும் ஜன்னல்கள் :
1) மெயின் வாசற்கால் (3'6'×7) - தேக்குமரம் ( மரத்தின் கணம் 5”×4" )
2) மெயின் கதவு - தேக்கு டோர் போட்டு பாலிஷ் போட்டுத்தரப்படும்
3) இதர வாசற்கால் ( 3'×7' ) - கானா தேக்கு மரம் (மரத்தின் கணம் 4”x3" )
4) இதர கதவுகள் ஆர்டினரி பிளஷ் போர்
5) டாய்லெட் கதவு (26×7') PVC டோர்
6) ஜன்னல்கள் MS கானா தேக்கு மர ஜன்னல்கள் மற்றும் 12mm சதுரக்கம்பி கொண்டு கிரில் செய்து தரப்படும்.
7) வெண்டிலேட்டர் (2'×1'6") கானா தேக்கமரவெண்டிலேட்டர் , 12mm கிரில் மற்றும் கண்ணாடி ( Pinheaded )
9.சமையல் அரை பிளாட்பார்ட் :
கிரானைட் பிளாட்பாரம் அமைத்து SS சிங் ( 2'×2' ) அளவிலும் மற்றும் கிரானைட் கல் கொண்டு அலமாரி செய்து கொடுக்கப்படும்.
10.டைல்ஸ் வேலை :
சமையல் அறையில் பிளாட்பார்மிற்கு மேல் 5'0" உயரத்திற்கு டைல்ஸ் ( ரூ.45/-மதிப்பல் ) ஒட்டித் தரப்படும்.குளியல் அறையில், நிலமட்டத்திலிருந்து 7'0" அடி
உயரத்திற்கு டைல்ஸ் ( ரூ.45/- மதிப்பில் ஒட்டித்தரப்படும் ) தனி டாய்லெட்டிற்கு நில மட்டத்திலிருந்து 5'0" உயரத்திற்கு டைல்ஸ் ஒட்டித் தரப்படும்). வீட்டின் உள்நிலமட்டத்திதற்கு வெர்டிபைடு டைல்ஸ் ( 2'x2' ) ( ரூ.50/- மதிப்பில் ) ஒட்டித்தரப்படும்.
11. பெயின்ட் வேலை :
வீட்டின் உள்புறம் சுவர் 2-கோட் பட்டி பார்த்து 1-கோட் பிரைமர் 2-கோட் பெயின்ட் அடித்து தரப்படும்.மர வேலை மற்றும் கிரில் வேலைகளுக்கு 1-கோட் பிரைமர் & 2-கோட் எனாமல் பெயின்ட் அடித்து தரப்படும். வெளிப்புற சுவற்றிற்கு 1- கோட்
பிரைமர் & 2-கோட் எமல்சன் பெயின்ட் அடித்து தரப்படும்.
12.மேல்நிலை தண்ணீர் தொட்டி :
தரமான PVC டேங்க் 1000-லிட்டர் கொள்ளலவில் வைக்கப்படும். வாட்டர் டெலிவரி பைப்லைன் 1' (15kg) பைப்பும், பாத்ரூம் வேஸ்ட் லைன் 2% (4kg) பைப்பும் மற்றும் டாய்லெட் வேஸ்ட் லைன் & மழைநீர் பைப் லைன் 4" (4kg) பைப்பும்
போட்டுத்தரப்படும்.
13.இதர வேலைகள் (Extra Work) :
கீழ்க்கண்ட இதர வேலைகள் கட்டிடத்தின் சதுரடி விலையில் அடங்காது. இவைஅனைத்தும் தனி விலையில் (தனி ரேட்) செய்து கொடுக்கப்படும்.
1. நிலத்தடி தண்ணீர் தொட்டி (Sump) & செப்டிக் டேங்க் 1லிட்டருக்கு ரூ.18.00 வீதம் தேவையான அளவில் கட்டிக் கொடுக்கப்படும்.
2.காம்பண்ட் சுவர் ( தேவைப்பட்டால் )
3. சைட் கிளீனிங், லேபர்செட்
4.ஆழ்துளை கிணறு (Borwell) பைப்லைன்.
5.EB சர்வீஸ் (Temporary Service)
குறிப்பு :
1. கட்டிடத்திற்கு தேவையான மின்சாரம் மற்றும் தண்ணீர் , வீட்டு உரிமையாளரையே சேரும்.
2.தீர்மானிக்கப்பட்ட பிளானில் உள்ளபடி வேலை செய்துதரப்படும். வேளையில் மாற்றம் இருப்பின் கட்டுமானத்திற்கு முன் தெரியபடுத்த வேண்டும்
இல்லையேல் அது இதர வேளைகளில் சேரும்.
கட்டுமானத்திற்கு உபயோகப் படுத்தப்படும் பொருட்கள் :
1.சிமெண்ட் - DALMIA & ULTRATECH
2.கம்பி - AMMAN
3.செங்கல் - நாட்டு செங்கல்
4.M- Sand - தரமான கிரசர் சேன்ட்
5.ஓயர் - Kundan
6.சுவிட்ச் - Kundan, HiFi
7.PVC பைப் பிட்டிங் - supreme, Finolex, Watertec, Plato
8.கிளாசெட் வாஷ்பேசின் - Parryware
9.பெயிண்ட் - Asian, Nippon
கட்டுமானத்தின் தொடக்க மதிப்பு ஆனது சதுர அடி 2300 முதல் 3500 வரை வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப செய்து கொடுக்கப்படும்.
இதுவரை ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் சொல்கிறோம் .
பொறியாளர்கள் .Er.k.ராம்குமார்
Er.K.வெங்கடேசன் .
#வாஸ்துபூஜைசெய்ய