05/01/2026
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாவட்ட கைப்பந்து ( Handball ) சாம்பியன்ஷிப் போட்டி 2025-26 ஜனவரி 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சாரா மெட்ரிகுலேஷன், வல்லநாடு பகுதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது . மாவட்ட கைப்பந்து போட்டியை சாரா மெட்ரிகுலேஷன் தாளாளர் அவர்களும் சாரா ஜூவல்லரி உரிமையாளரும் பிரபல தொழிலதிபர் மதிப்பிற்குரிய ஹாஜி எம். கே. எம் முகமது நாசர் அவர்கள் இந்த போட்டியினை தொடங்கி வைத்தார்கள். முதல் நாள் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக வல்லநாடு காவல்துறை ஆய்வாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த மாவட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவர், பொறியாளர் அப்துல் வதூத்,B.E, வரவேற்றார். இந்த மாவட்ட விளையாட்டு விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்தணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பொருளாளர் ரம்யா, துணை செயலாளர் இன்பா சதீஷ்குமார், கைப்பந்து சங்க பொறுப்பாளர் ஸ்வேதா மற்றும் சாரா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் திருமதி உமா மகேஸ்வரி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ்,தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் உறுப்பினர்களான சாக்கேஷ் ,ஐயப்பன் அலீம் ,முத்துப்பாண்டி, ஆதில் மற்றும் நடுவர்கள் விழுப்புரம் பிரதீப், போன்றவர்கள் உடன் இருந்தனர். போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களையும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் செயலாளர் திரு பாரத்,B.E,NIS அவர்கள் வாழ்த்தினார். நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் சிறப்பு அழைப்பாளராக எஸ். எல் பெருமாள் M. tec ,( Indian Airforce Retd ) அவர்களும்
திரு. பழனிச்சாமி B, A ( secretary , Tamil Nadu Master Athletic Association ) மற்றும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் Dr.SyedAli அவர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்ட விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை திருநெல்வேலி கைப்பந்து சங்கத்தின் செயலாளர் ,டாக்டர் சாகுல் ஹமீத் ( Principal , Melapalayam Muslim hr.sec.school ) வாழ்த்தினார்கள்.
Sub-junior boys winner , Sarah Matriculation school,
Junior boys winner,
St. Joseph's Cbse School ,
Junior-Girls category Winner , St. Lucia school, kurumbur.
Regards
Thoothukudi District Handball Association