Win engineering works

Win engineering works production and fitting

24/07/2025
11/07/2025

Shed work is going around the temple at my home town

14/08/2024

வயது அறுபது கடந்த பிறகாவது அமைதியாக வாழவேண்டும் என நினைத்தால்...

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்..
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது. இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே. அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்? தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.
வயது முதிர்ந்தஆலும் நம்பிக்கையுடன் உழை. உலகம் வசப்படும்..

10/05/2024

1.யாரனேும் உங்களுக்கு கை குடுக்க வரும்போது நீங்கள் இருக்கையில் ஒன்றில் அமர்ந்திருந்தால் எழுந்து நின்று குடுங்கள் அவர் சிறியவரோ ஏழையோ யாராகினும்!

2.உங்களை நம்பி யாரேனும் உங்கள் பாதுகாப்பில் இருந்தால் அவர்களை காப்பாற்றுங்கள். உங்களோடு இருப்பவர்களுக்கென தனிப்பட்ட ரீதியில் மரியாதை உண்டு , நகைச்சுவை உணர்வோடு பழகினாலும் மரியாதை தர தவறாதீர்கள்!

3.விருந்தினராக சென்ற இடத்தில் உங்களுக்கு தரப்படும் உணவில் குறை கண்டு பிடிக்காதீர்கள், உப்பு , புளி போன்ற விடயத்தில் அலட்டி உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளவேண்டாம்!

நீங்கள் பணம் கொடுத்து வாங்காத எந்த தின்பண்டமாகிலும் அதன் இறுதிதுண்டு வரை சாப்பிடாமல் வாங்கியவருக்கே குடுத்து விடுங்கள்,!

4.வியாபாரம் தொடர்பிலோ அல்லது வேறு எந்த விடயத்திலுமோ நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது அதை செய்கிறேன் இதனை உங்களுக்கு தருகிறேன் என முதலாவது வாக்கு தராதீர்கள், பின்நாளில் நீங்கள் நஸ்டமடைய அதுவே காரணமாகும்.

5.நீங்கள் செய்யாத வேலையின் பெறுமதியை திருடாதீர்கள்,யார் செய்தார்களோ அவர்களுக்கே அதன் பாராட்டு கிடைத்தாகவேண்டும்.

6.எவ்வேளையிலும் வீண்பழிக்கு உட்படாதீர்கள், உரிய தரப்பிடம் நேரடியாக சென்று உங்கள் நேர்மையை காட்ட தவறாதீர்கள், வீண்பழி சுமத்துவோரிடம் அமைதியாக இருந்தாலும் மேலிடத்தில் இருப்பவரிடம் உங்கள் மீது நல்லெண்ணம் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். நேர்மை அதற்கு உதவும்!

7.உரியவரால் நீங்கள் அழைக்க படாத விருந்துக்கு யார் அழைத்தாலும் செல்லாதீர்கள், நண்பர்களிடம் இந்த விடயத்தில் கறார் காட்டினாலும் பரவாயில்லை!

8.கண்களை பார்த்தே பேசுங்கள், உறவுக்காக கெஞ்சாதீர்கள், அது எப்படியான உறவாக இருந்தாலும் சரி உங்கள் மேல் இல்லாத தவறுக்காக மன்னிப்பு கோராதீர்கள், ஒரு தரம் நீங்கள் பிழை செய்யாமல் கேட்கும் மன்னிப்பு காலம் முழுதும் உங்களை அவர்களிடம் கெஞ்ச வைத்து உங்கள் தன்மானத்தை இழக்க செய்யும்,!

9.யாரேனும் உங்களுக்கு வாழ்க்கை தந்ததாக நினைத்துகொள்ளாதீர்கள், மிக முக்கியமான உறவொன்றின் மூலம் கிடைக்கும் எதற்கும் நன்றியுணர்வோடு இருங்கள், அதை தவிர்த்து அவர்களை இழந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை என்னவாகும் என்று நினைத்து உங்களை நீங்களே தாழ்த்திகொள்ளாதீர்கள்! ஆக சிறந்த படைப்பு நீங்கள் தான்,

10.நன்றாக உடை அணியுங்கள், நாகரீகம் என்பது நவீன ஆடைகளை சார்ந்தது அல்ல, அது உங்களை சீராக காட்டினாலே போதுமானது, சீரான உடையும் நேர்த்தியான உடைகளின் மீதான தெரிவும் உங்களை மற்றவர் மதிக்கும் படி செய்யும்,

கிழிந்த ஆடைகளும் தசைகளை பிதுக்கி காட்டும் அலங்காரமும் மற்றவர் முன் உங்களை அருவருப்பாகவே காட்டும்,!

11.எங்கே சென்றாலும் பணத்தோடு செல்லுங்கள், பணம் இல்லாத போது நண்பர்களே விருந்துக்கு அழைத்தாலும் சுற்றுலாவுக்கு அழைத்தாலும் நிராகரிப்பது நல்லது, அவர்கள் மத்தியில் உங்களை நீங்களே பெலவீனராக்கும் முயற்சி அது.

குறிப்பிட்ட தொகையை நிரந்தர வைப்பாக வைத்துகொள்ள போராடுங்கள், தர்மம் செய்கிறேன் பேரில் குடிகார பிச்சைகாரர்களுக்கு தராதீர்கள், நிலை அறிந்து தர்மம் செய்யுங்கள்.

12.மற்றவர் பேசும் போது கேளுங்கள், நல்ல காரியங்களுக்கு தலையாட்டுங்கள், கண்களை பார்த்து பேசுங்கள், பெண்களிடம் குழந்தைகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள்,

தற்காலத்திற்கு ஏற்ற போல் உங்கள் நெருங்கிய உறவினரின் பெண்குழந்தையானால் குழந்தைக்கோ பெற்றார்க்கோ அசௌகரியத்தை உண்டுபண்ணுவது போல தூக்காமலும் தொடாமலும் இருங்கள். அது உங்கள் குழந்தை பருவத்திற்கு நீங்களே செய்யும் மரியாதை.!

13.எதுவாக இருந்தாலும் கோபத்தை வெளிப்படுத்துவதில் நிதானத்தைக் காட்டுங்கள். கோபமாக இருப்பது ஆற்றல் விரயம்.

14.ஆல்ககாலுடன் புகைப்படம் இடுவது அநாகரிகம் என்பதை உணருங்கள், ஆபாச குறியீடுகளை புகைப்படம் எடுக்கும் போது காட்டாதீர்கள், நடுவிரல் காட்டுவது நவீன முறை அல்ல என்பதை வளர்ந்து வரும் சிறாருக்கு சொல்லிகொடுங்கள், ஆக குறைந்தது அப்படியான புகைப்படங்களில் இருந்து நீங்கள் விலகி நில்லுங்கள்!

15.நேர்மையாக இருக்க தயங்காதீர்கள். நேர்மையாக இருப்பது போல் நடிப்பினை காட்டாமல் தனி அறையானாலும் உங்களுக்கு நீங்களே முதலில் நேர்மையாக இருங்கள்.

நேர்மையாக இருப்பது என்பது மிகச்சிறந்த பெண்களினதும் ஆண்களினதும் குணம் மறவாதீர்கள்!

05/11/2022

My renovated elevation work at paramakudi.Thanks to the god

Address

7/34pallivasal Street, Ems
Paramakudi
623701

Telephone

8098388022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Win engineering works posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Win engineering works:

Share