02/01/2024
❣️புத்தாண்டு வாழ்த்துக்கள்❣️
2023 செல்ஃபி தொடர் 6
🔹🔹🔹🔸🔸🔸🔸🔹🔹🔹
2023 ஆண்டில்
நம்மை நாம் சுய பரிசோதனை செய்து கொள்ளும் பொழுது...
இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், செய்திருக்கலாம் என்ற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்....
இன்னும் கொஞ்சம் நல்லா நட்பு பாராட்டி இருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் உடலுக்காக அக்கறை செலுத்தி இருக்கலாம்..
இன்னும் கொஞ்சம் உணவு கட்டுப்பாடு இருந்திருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்திருக்கலாம்...
இன்னும் கொஞ்சம் பண விஷயத்தில் இப்படி நடந்திருக்கலாம்...
இன்னும் கொஞ்சம் அந்த நபருக்கு பண உதவி செய்து இருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் நமது பண்டிகைகளை இப்படி கொண்டாடி இருக்கலாம்...
கொஞ்சம் அவரிடம் நல்ல வார்த்தைகளை பேசி இருந்திருக்கலாம்...
இன்னும் கொஞ்சம் கோபத்தையும் குறைத்து நடந்து கொண்டிருக்கலாம்...
இன்னும் கொஞ்சம் அப்படி இருந்துருக்கலாம்...
இன்னும் கொஞ்சம் இப்படி இருந்துருக்கலாம்னு.....
இதுபோன்று எத்தனை ஆயிரம் இருந்திருக்கலாம்...... என்று தோன்றுகிறது.
வரும் ஆண்டில் இதை வெகுவாக குறைத்து இருக்க வேண்டும் ... சபதத்தோடு புதிய வருஷத்தை எதிர்கொள்வோம்.
·
நட்பாய்,உறவாய் நாம் சிலருக்கு கிடைத்திருப்போம்.
நம் அருமை தெரியாமல் நம்மை காயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். சற்று விலகி விட வேண்டும்... விரோதம் பாராட்டாமல் சற்று தூரல் என்று புன்னகைக்கு சென்று விட வேண்டியதுதான்...
சிலர் நமக்கு நட்பாய் ,உறவாய் அமையலயே என ஏங்கிக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்...
வரமா சாபமா வாழ்வது அவரவர் எண்ணங்களில் என்பது உண்மைதான்....
யாராக எதுவாக எப்படி இருக்கிறோம் ....என்பதை உணர்ந்து எங்கே யாருடன் எப்படி இருக்கனும் என்பதை முடிவெடுத்து சந்தோசமாக வாழனும்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
குமார் கண்ணையன்
கடலூர்.