வேதியியல் - ஒரு அட்டவணையின் ஆவர்த்தனம்

  • Home
  • India
  • Thanjavur
  • வேதியியல் - ஒரு அட்டவணையின் ஆவர்த்தனம்

வேதியியல் - ஒரு அட்டவணையின் ஆவர்த்தனம் தனிம ஆவர்த்தன அட்டவணை அடிப்படையிலான வேதியியல் பக்கம்

வேதியியல் என்பது பொதுவாக பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் பாகற்காய் போன்றது தான். நான் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றதை பற்றி நண்பரிகளிடம் கூறும்போது யாரோ வேற்றுகிரக மனிதரை பார்ப்பது போன்ற பார்வை ஒரு நொடியேனும் வருவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். உடனே வேதியியல் ஒன்றும் முக்கனியும் சர்க்கரையும் என்று நான் கூறபோவதில்லை. இன்னும் சொல்லப்போனால் வேதியியலை இங்கே விளக்கபோவதும் இல்லை. வேதியியல

் மற்றும் பொதுவான அறிவியல் மேல் பலர் கொண்ட காரணமுடைய, காரணமற்ற மற்றும் பைத்தியகாரதனமான காதலும் அதனால் வேதியியலிலும் அதனோடு தொடர்புடைய மனித வாழ்விலும் நடந்த பல சரித்திர சம்பவங்களும் விந்தையானவை, வேடிக்கையானவை. இவற்றில் விளைவாக வந்த ஆவர்த்தண அட்டவணை என்பது தனிமங்களை அவற்றின் எலக்ட்ரான் எண்ணிக்கை அடிப்படையில் வகைபடுத்துவது. ஆனால், இந்த வகைபாட்டினை வைத்து ஒருவர் இதுவரை கண்டுபிடிக்கபடாதவற்றையெல்லாம் துல்லியமாக இருக்கிறது என்றும் அப்படி அவை இருந்தால் அவற்றின் பண்புகள் இப்படி இருக்கும் என்றும் கூறி அதை நிரூபித்தும் காட்டினார் என்றால் அவரை நாம் என்னவென்று சொல்வது. மந்திரவாதியா, குறிசொல்லியா, சாமியாரா, துறவியா இல்லை கடவுளா? உண்மை என்னவெனில், டிமிட்ரி மெண்டலீவ் அப்படித்தான் இருந்தார். அவர் வகைபடுத்திய இந்த ஆவர்த்தண அட்டவணை உலக வரலாற்றில் என்னென்ன விதமான விளையாட்டுகளை ஆடுகிறது என்பதை தேனினும் இனிய என் தாய்தமிழ் மொழியில் கொடுக்கவேண்டும் என்பதே இந்த பக்கத்தின் நோக்கம். அறிவியல் பிரசுரங்கள் எழுதிய அனுபவம் உண்டென்றாலும், தமிழில் இது போன்ற கட்டுரைகள் எழுதிய அனுபவம் கிடையாதென்பதால் பிழைகள் இருக்கலாம். அப்படி பிழையான சம்பவங்கள் ஏதேனும் இந்த பக்கத்தில் சித்தரிக்கபட்டிருந்தால் நண்பர்களும் அன்பர்களும் தயக்கமின்றி சுட்டிகாட்ட வேண்டுகிறேன். எனது இந்த கன்னி முயற்சி வெற்றிபெற தங்களின் ஆதரவை வேண்டுகிறேன். துவங்கிய இந்த பணியில் தொடர்ந்து செயல்படும் திறனை இறைவனிடம் வேண்டுகிறேன்.
பசுபதிகோவில் கண்ணன்
(The Disappearing Spoon என்ற புத்தகத்தினை தழுவியே இங்குள்ள கட்டுரைகள் எழுதப்படுகின்றன)

Address

Thanjavur
614206

Alerts

Be the first to know and let us send you an email when வேதியியல் - ஒரு அட்டவணையின் ஆவர்த்தனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வேதியியல் - ஒரு அட்டவணையின் ஆவர்த்தனம்:

Share