Innov Homes

Innov Homes �INNOVATION AND IMPLEMENTATION
�CRAFTING PEOPLE'S DREAMS FOR 30+
YEARS
�BLENDING TRADITIONAL CONSTRUCTION PRACTICES WITH MODERN METHODOLOGIES

05/03/2026

Tiny bricks transferring tons.!

17/02/2026

Chettinad traditional roofing practice .!

13/01/2026

Details take time.! 💚

Budding studio residence involving traditional construction practices.!
29/04/2024

Budding studio residence involving traditional construction practices.!

When we say traditional practice, we mean it 💚
06/04/2024

When we say traditional practice, we mean it 💚

 #மரபுசார்கட்டுமானம்  #காரைக்குடி_01  #சுண்ணாம்பு_கட்டுமானம்மரபுசார் தொழில்நுட்ப புரிதலோடு உருவாகி வரும் வீட்டின் அடித்த...
12/09/2023

#மரபுசார்கட்டுமானம்
#காரைக்குடி_01 #சுண்ணாம்பு_கட்டுமானம்
மரபுசார் தொழில்நுட்ப புரிதலோடு உருவாகி வரும் வீட்டின் அடித்தளம் (கல்,மண் மற்றும் சுண்ணாம்பு கொண்டு) அமைக்கும் பணியில்..,

 #மரபுசார்கட்டுமானம்  ஏறத்தாழ 200 வருடங்கள் பழமையான, மரபுசார்ந்து மண் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட அ...
31/08/2023

#மரபுசார்கட்டுமானம்


ஏறத்தாழ 200 வருடங்கள் பழமையான, மரபுசார்ந்து மண் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட அரண்மனை வீட்டை மீண்டும் பழமை மாறாமல் மீட்டுருவாக்கம் செய்யும் பணியில்..,

27/02/2023

கருங்கல் பதிக்கும் பணியில்..!
#சுண்ணாம்பு_காரை_வீடு

மரபுசார் கட்டுமானத்தின் அடுத்த நகர்வாய் வீட்டின் உட்புறத்தில் செம்மண் பூச்சு, சுண்ணாம்பு பூச்சு மற்றும் உலகளவில் பிரசித்...
03/02/2023

மரபுசார் கட்டுமானத்தின் அடுத்த நகர்வாய் வீட்டின் உட்புறத்தில் செம்மண் பூச்சு, சுண்ணாம்பு பூச்சு மற்றும் உலகளவில் பிரசித்திபெற்ற செட்டிநாட்டு கட்டிடகலையின் சிறப்புகளின் ஒன்றான 'முட்டை பூச்சு' ஆகியன நிறைவுபெரும் தருவாயில்.
சிமெண்ட் பூச்சு போல் இல்லாமல் இவை முற்றிலும் இயற்கை சார்ந்து இயங்குவதால் வீட்டினுள் அதிகப்படியான வெப்பத்தை கடத்துவதில்லை, இதன் காரணமாக அகத்தில் இதமான சூழல் அமைய உதவுகின்றன.

As our next step towards eco-living, here we have done the inner wall plastering using mud and lime. Also we have completed the *world famous* chettinad special plaster called 'Egg plaster' for a silky smooth like finish.
These plasters helps in reducing the heat thereby providing a pleasant stay inside the home.

நிர்மல் ஜோன்ஸ்,
சூழல்சார் கட்டுமான வடிவமைப்பாளர்,
(eco-constructor)
+91_96980-89670 +91_86674-62892

#மண்_பூச்சு #சுண்ணாம்பு_பூச்சு #முட்டை_பூச்சு #செட்டிநாட்டு_கட்டிடக்கலை

08/12/2022

மரபை நோக்கிய பயணத்தில், திருச்சியில் மண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு செய்யப்படும் வீட்டின் உட்புற பூச்சு வேலைகள் நிறைவடையும் தருவாயில்.!
பொதுவான சிமெண்ட் பூச்சு போல் இல்லாமல் இவை புறசூழலுக்கு ஏற்றவாறு தம்மை தகவமைத்து, வீட்டினுள் இதமான சூழல் அமைய இயற்கையாக உதவுகின்றன.

On our attempt to create a sustainable, cement-steel free eco-homes, we are now done with this mud and lime plaster on interior walls. Unlike cement plaster, these plasters helps in cutting down the extreme surrounding temperature by actively communicating with the nature throughout its lifetime.

#மண்_பூச்சு #சுண்ணாம்பு_பூச்சு #மண்_கட்டுமானம் #சுண்ணாம்பு_கட்டுமானம் #மண்_வீடு #சுண்ணாம்பு_வீடு

 #முற்றம்_என்னும்_அழகியல் #நடுமுற்றம்  முற்றம் (courtyard) என்பது வீட்டின் மையத்தில் இருக்கும் சதுர அல்லது செவ்வக வடிவில...
29/09/2022

#முற்றம்_என்னும்_அழகியல்
#நடுமுற்றம்

முற்றம் (courtyard) என்பது வீட்டின் மையத்தில் இருக்கும் சதுர அல்லது செவ்வக வடிவிலான திறந்தவெளி என புரிந்து கொள்ளலாம்.இந்த அமைப்பு பெரும்பாலும் தென்னிந்தியாவின் பகுதிகளில் உள்ள வீடுகளில் இடம்பெறும்.பொதுவாக இது வீட்டின் தலைவாசலுக்கு நேரெதிராக அமைக்கப்பற்று வீட்டினுள் உள்ள அனைத்து அறை மற்றும் இடங்களையும் இணைக்கும்படி அமைத்திருக்கும்.

வெளி காற்றையும் வெளிச்சத்தையும் உள்ளே கொண்டு வரவும் வீட்டினுள் நிலவும் வெப்ப காற்றை வெளியே தள்ளவும், வீட்டினுள் தானியங்கள் போன்றவற்றை உலர்த்தவும் இந்த முற்றங்கள் பயன்பட்டு வந்தன.மேலும் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் நினைவுகளை தாங்கி நிற்கும் பெருமையும் இம்முற்றங்களுக்கு உண்டு.மழைக்காலங்களில் மழைநீரை வீட்டுனுள் அறுவடை செய்து பின்னாட்களில் அதனை பயன்படுத்தவும் இம்முற்றங்கள் உதவியுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து பேசவும் குடும்பம் சம்மந்தமான சில முக்கிய முடிவுகளும் இந்த முற்றங்களில் தான் நடந்தேறின.

வீட்டினுள் வெளி(space) அதிகமாக இருந்தபொழுது அதில் வசிப்பவர்கள் மனமும் பெரியதாகவே இருந்தது(broad-mind)..
(ஐம்பூத கோட்பாட்டின்படி வெளி மனதோடு தொடர்புடையது) 😲

இதன் காரணமாகவே அந்நாட்களில் முற்றம் போன்ற அமைப்புகள் பெரியதாகவும் படுக்கையறை போன்றன ஒப்பீட்டளவில் சிறியதாகவும் அமைக்கப்பெற்றன 😳

இன்றைய நவீனமும் மக்களும் பெரும்பாலும் அறைகள் பிரிப்பதையும்(room seperation) ஒரு ஜான் இடத்தை கூட சும்மா விட்டுவைக்க கூடாது(effective usability.!?) என்பதில் உறுதியாக இருப்பதால் முற்றம் போன்ற அமைப்புகளை காண்பது குதிரை கொம்பாக உள்ளது 🧐.
இடவசதி போதுமானதாக இல்லை எனும்பட்சத்தில் இந்த முற்றத்தை தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து (customize) வீட்டினுள் காற்றும் வெளிச்சமும் வந்து செல்வதை உறுதி செய்து கொள்ளலாம் 🤓

திருச்சியில் இருவேறு இடங்களில் சுண்ணாம்பு காரை கொண்டு கட்டபட்டு வரும் வீடுகளில் ஒன்றில் நடுமுற்றமும்💚 மற்றொன்றில் customized courtyard எனப்படும் தேவைக்கு ஏற்றாற்போல் 'மாற்றியமைக்கப்பற்ற முற்றமும்'😇 இடம்பெற்றிருப்பதை படத்தில் காணலாம்👇🏻. எங்களது அடுத்த செயல்பாடுகளிலும் இந்த முற்றம் அமைப்பு 'கட்டாயம்' இடம்பெறும்வண்ணம் திட்டமிட்டுள்ளோம்(அறிவிப்பு விரைவில்)😊

வீடு என்பது எப்படி சமயலறை, படுக்கையறை போன்றவற்றை கொண்டுள்ளதோ அதுபோல முற்றமும் கட்டாயம் இடம்பெற வேண்டும் (இயன்றவரை நடுமுற்றம் அமைப்பது சிறப்பு) என்ற கொள்கை சார்ந்து பயணிப்போம் 💚

நிர்மல் ஜோன்ஸ்,
சூழல்சார் கட்டுமான வடிவமைப்பாளர்
(eco-constructor).
+91_96980-89670, +91_86674-62892

Address

No. 5, Drive Issac Street, Sangiliyandapuram
Tiruchirappalli
620001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919698089670

Alerts

Be the first to know and let us send you an email when Innov Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Innov Homes:

Share