JP'S Constructions

JP'S Constructions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JP'S Constructions, Construction Company, VADAKKANKULAM, Tirunelveli.

12/11/2025

3BHK HOUSE for Sale in Vallioor

3BHK HOUSE FOR SALE IN VALLIOOR
12/11/2025

3BHK HOUSE FOR SALE IN VALLIOOR

3 BHK HOUSE FOR SALE▪︎Golden Avenue Valliyur▪︎Dtcp approved ▪︎Bank Loan Available ▪︎Gated community ▪︎24/7 security ▪︎CC...
29/10/2025

3 BHK HOUSE FOR SALE
▪︎Golden Avenue Valliyur
▪︎Dtcp approved
▪︎Bank Loan Available
▪︎Gated community
▪︎24/7 security
▪︎CCTV surveillance
▪︎Water facilities
▪︎Drainage sewage systems
▪︎Opposite park area

House details :

▪︎East facing
▪︎Corner villa
▪︎4.04 cents of land
▪︎2100 sq ft build up area
▪︎3Bhk house with 2 car parking spaces
▪︎With garden area space
▪︎Fully cupboard work
▪︎Car washing area
▪︎Open space area

18/07/2025
Location: Ramachandra Nagar.Post: Dhanakkarkulam.Taluk: Radhapuram.District: Tirunelveli...
09/12/2024

Location: Ramachandra Nagar.
Post: Dhanakkarkulam.
Taluk: Radhapuram.
District: Tirunelveli...

💻50th🖨Approval 📑Plan🏡
19/09/2021

💻50th🖨Approval 📑Plan🏡

25/08/2021

பொறியாளர்களுக்கான பதிவு!விழிப்புணர்வு பதிவு!

பொறியாளர்.வரதராஜன்,பாரதி பில்டர்ஸ்,

காண்ட்ராக்ட் முறையில் வீடு கட்ட நியாயமான முறையில் ரேட் சொன்னா அதிகம் என்கிறார்கள்...சரி உங்களால் மெட்டீரியல் எல்லாம் அலைந்து திரிந்து விசாரித்து(அவர்கள் பொழப்பை விட்டுட்டு) வாங்கி தர இயலும் என்றால் கன்சல்டிங் மற்றும் சூப்பர்வைசிங் முறையில் தாருங்கள் என்றாலும் யோசிக்கின்றனர்...அப்ப என்ன இலவச சேவையா நாங்க செய்ய முடியும்?இதை நம்பிதானே நாங்களும் எங்க குடும்பமும் இருக்கோம்...

மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு பெண்மணியை நேரில் சந்தித்தேன்...அவர் கடந்த ஒரு மாதமாக என்னிடம் பேசி வருகிறார் அவரது வீட்டு வேலை விஷயமாக...இரு முறை இலவசமாக பிளான் போட்டு தந்தேன்...அவர் கேட்டபடி நான்கு முறையில் மாற்றி மாற்றி கொட்டேஷன் கொடுத்தேன்...அதாவது மெட்டீரியல் காண்ட்ராக்ட்,மொத்த லேபர் காண்ட்ராக்ட்,லேபர் காண்ட்ராக்ட்,கன்சல்டிங் மற்றும் சூப்பர்வைசிங் என நான்கு முறை...அதையும் நான்கு தடவை ரிவைஸ் பண்ணி வேறு தந்தேன்...

அத்தோடு அல்லாமல் அந்த வீட்டிற்கு தேவையான மொத்த மெட்டீரியல் டீட்டெய்லும் கேட்டார்...சலிக்காமல் தந்தேன்...எனக்கு தெரிந்த ஒரு மேஸ்திரி இருக்கிறார்...அவரை வைத்து செய்வீர்களா என்றார்...நன்றாக வேலை செய்பவராக இருந்தால் செய்யலாம் என்றேன்...

நீங்கள் செய்த வேலைகளை நான் நேரில் பார்வையிடனும் என்றார்...அழைத்துச்செல்ல நான் தயார் என்றேன்...நீங்கள் செய்வதாக அனுப்பிய வீட்டு எலிவேசனெல்லாம் நெட்டிலிருந்து எடுத்து போட்டீங்களா என சந்தேகம் கிளப்பினார்...அடப்பாவமே என அனைத்து எலிவேசனையும் அதன் ஒரிஜினல் கட்டிடத்தின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பினேன்...சாரி சார் தப்பா நினைக்காதீங்க சிலர் அப்படி செய்வார்கள் என்றார்...

சரி..எப்ப சார் நேர்ல மீட் பண்ணலாம் என்றார்...நீங்க எப்போ அழைத்தாலும் நான் ரெடி மேடம் என்றேன்...

அழைத்தார்...நேரில் சென்று சந்தித்தேன்!கூட அவரது உறவினர் ஒருவர் இருந்தார்...வயதில் பெரியவர்!அவரது கணவரைப்பற்றி நான் கேட்கவுமில்லை...அவர் சொல்லவுமில்லை!இந்த பெண்மணி ஒரு அரசு ஊழியர்!

ஒரு மணி நேரம் பேசினோம்...எல்லாத்தையும் விவரமாக சொன்னேன்...காண்ட்ராக்ட்டில் செய்தால் எனக்கு லாபம் அதிகம்...கன்சல்டிங் முறையில் செய்தால் உங்களுக்கு ஆதாயம்...வேண்டுமென்றால் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் என் சைட் இன்ஜினியரை உங்களுக்கு உதவ சொல்கிறேன்...

பேசிக்கொண்டிருக்கும்போது அந்த பெரியவர் நீங்க சொல்லும் மெட்டீரியல் காண்ட்ராக்ட் ரேட் நியாயமான ரேட்தான்...ஆனால் சூப்பர்வைசிங் முறையில் நீங்க கேட்பது அதிகமா தெரியுதே என்றார்...

சார்...காண்ட்ராக்ட் முறையில் செய்வதைவிட கன்சல்டிங் முறையில் செய்யும்போது உங்களுக்கு குறைவாகத்தானே செலவாகும்...பின் எப்படி சூப்பர்வைசிங் சார்ஜையும் அதிகம் என்பீர்கள் என்றேன்...

அந்த பெரியவர்...லேபர் காண்ட்ராக்ட்டும் கொடுத்துட்டு இன்ஜினியருக்கு வேற தரனுமான்னு யோசிக்கிறோம் என்றார்...

அப்ப ஏன் சார் இன்ஜினியரை வச்சு கட்டனும்னு நினைக்கிறீங்க?எங்களிடம் பிளானை வாங்கிகிட்டு மேஸ்திரியை வைத்தே செஞ்சுக்கலாமே?எதுக்கு அப்புறம் இவ்வளவு டீட்டெய்ல் வாங்குறீங்க...மேஸ்திரியை கேட்டாலே அவரும் ஓரளவு இதையெல்லாம் சொல்வாரே?அப்ப மேஸ்திரியையும் நம்பாம எங்களிடம் தீர விசாரிச்சிக்கிட்டு அந்த மேஸ்திரியிடம் வேலை வாங்கவா மேடம் இந்த ஒரு மாத ஃபாலோ அப்?

இல்ல சார் நாங்களும் சிக்கனமா வீட்டை கட்டனுமா இல்லையா?மேஸ்திரி ஏதும் டெக்னிக்கலா கோட்டைவிட்டுவிடுவாரோ என அஞ்சிதான் இன்ஜினியரை வச்ச செய்யலாம்னு முடிவு பண்ணினேன்...இப்ப உங்ஙளுக்கு வேற தனியா பணம் தரனுமேன்னு யோசிக்கிறேன்...

மேஸ்திரிகள் கட்டுற வீடு ஒன்னும் விழுந்திராது அவர்களிடமே கொடுங்க...நீங்க மேஸ்திரியையும் நம்பல...எங்களையும் நம்பல...நான் இப்ப உங்களை எப்படி நம்புறதுன்னு தெரியல...ஆரம்பத்திலேயே இவ்வளவு குழப்பங்கள் உங்களுக்கு...நம்பிக்கையில்லாம இருக்கீங்க...நான் கன்சல்டிங் முறையில் செய்ய நான் ஒத்துகிட்டதே நீங்க ரிக்வஸ்ட் பண்ணி கேட்டதாலதான்...நாங்க ஒன்றும் இலவச சேவை பண்ண வரல மேடம்...இது ஒரு தொழில்...லாபத்தை குறைத்து வேணும்னா செய்யலாம்...ஆனால் லாபமே இல்லாம செய்து தருவாங்களா உங்களுக்கு?

வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது முக்கிய வேலை நடக்குறப்பவோ வந்து சொல்லிவிட்டு போனா போதும் சார்...அதுக்கு என்னவோ தந்துவிடுகிறேன் என்றார் கடைசியாக...

மேடம் இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தா நான் இப்படி செய்கிற ஆளில்லை என்று சொல்லி இருப்பேன்...இவ்வளவு டீட்டெய்லையும் வாங்கிகிட்டு எப்போதும் பிஸியா இருக்கிற என் நேரத்தையும் வீணடித்துவிட்டு இப்ப வந்து இப்படி கேட்கிறீங்க...என்றேன்!

சரி சார் கோச்சிக்காதீங்க...கன்சல்டிங் முறையில் உங்களால எனக்கு பாதி மிச்சம்னா கண்டிப்பா தருகிறேன்...சாயங்காலம் பேசுறேன் எங்க மேஸ்திரியிடம் விவரம் சொல்லிவிட்டு நாளை வாஸ்து நாள் பூஜை போடலாம் என்றார்...சரி சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நான் கிளம்பிவிட்டேன்...

இரவு 7 மணியாகியும் ஒன்றும் போன் வராததால் போன் பண்ணி கேட்டேன்...என்ன மேடம் பூஜை போடுவது விஷயமா சாயங்காலம் போன் பன்றேன்னு சொன்னீங்களே...ஒன்னும் பண்ணலயே என்றேன்...

ஒரே வரியில் முடித்துவிட்டார்.."சார்...சூப்பர்வைசிங் ஃபீஸ் ஜாஸ்திங்கிறாங்க...அதனால அப்புறம் பார்க்கலாம் சார்"...ஒரு மாதமா மணிக்கணக்கில் சந்தேகம் கேட்டவர் விவரம் வாங்குனவர் பேச்சு முடிந்தது!

அதாவதுங்க...ஒரு கொத்தனார் ஒரு நாளைக்கு 900 சம்பளம் வாங்குறாரு...மாசம் குறைந்தது ரூ.25000 சம்பாதிப்பார்...இவரைப்போல் பிற சென்ட்டரிங்,பெயிண்ட்டிங்,பிளம்பர்,எலக்ட்ரீசியன்,கார்பெண்ட்டர்,டைல்ஸ் மேஸ்திரி இதில்லாம கொத்தனார் வேலை எடுத்த மேஸ்திரி இவர்களையெல்லாம் வேலை வாங்கி இவர்களது வேலையை குறையில்லாமல் வேலை வாங்கி டெக்னிக்கலா சொல்லித்தந்து ஆறு மாசமா வீட்டு கூடவே பயணிக்கிற இன்ஜினியருக்கு மாதம் ஒரு 20000 அல்லது 30000 என கணக்கிட்டு தருவதில் அப்படி என்ன கஞ்சத்தனம்?

இன்ஜினியர் கட்டுன வீட்டுக்கும் மத்தவங்க கட்டுன வீட்டுக்கும் ஏதும் வித்தியாசமில்லைன்னு சொல்லுங்க...இந்த பணமே எங்களுக்கு வேண்டாம்!எல்லா மேஸ்திரிகளுக்குமே நீங்க காண்ட்ராக்ட் முறையில் சம்பளம் தரும்போது இன்ஜினியர்களுக்கு தர மட்டும் ஏன் மனசு வரமாட்டுது...உங்க பிள்ளை ஒருத்தரை சிவில் இன்ஜினியரிங் படிக்கவச்சிட்டு அவர் வந்து உங்களிடம் இதுபோல் புலம்பினால்தான் நம்புவீர்களா?

என்னைவிடுங்க...நான் இந்த தொழிலில் வளர்ந்துவிட்ட ஆள்...எனக்கு 10 வேலை நடக்குது...எனக்கு இது ஒரு அனுபவமா இருந்துட்டு போகட்டும்...ஆனால் வேலையே கிடைக்காமல் அல்லது புதிதாக செய்ய வருபவர்களை இதுபோல நடத்தினால் எப்படி அவர்கள் இந்த தொழிலுக்கு ஆர்வமாக வருவார்கள்?நீங்க சாமர்த்தியசாலியா நினைக்கலாம்...ஆனால் வேறு ஒருவரிடம் எளிதில் ஏமாந்துபோவீர்கள் என்பதே நிதர்சனம்!நல்லா இருங்க...

இது என்னோட புலம்பல் அல்ல...எனக்கு இதனால் வருத்தமோ கவலையோ அல்ல...ஏதோ நாலு பேரிடம் சொல்ல தோணுச்சு...எழுத ஆர்வமா இருந்துச்சு!

அவரிடம் நான் சொன்ன மெட்டீரியல் ரேட் ரூ.1800/சதுர அடி

நான் கேட்ட கன்சல்டிங் மற்றும் முழு சூப்பர்வைசிங் ஃபீஸ்(இந்த சைட்டுக்கென்று தனி இன்ஜினியர் போடுகிறேன் என்றேன்) 8%...ஏன்னா இது 30 லட்ச ரூபாய் வேலை...தொகை அதிகமாகும்போது சதவீதம் இன்னும் குறையும்...இதுவே மெட்டீரியலோடு நாம் செய்யும்போது லாப தொகையாக 15% வைப்போம்...ஆனால் அலைச்சல் மற்றும் ரிஸ்க் ஜாஸ்தி...எல்லாம் போக 10% நின்றாலே பெரிய விஷயம்!

சூப்பர்வைசிங் முறையில் இழப்பதற்கு எதுவுமில்லையென்றாலும் லாபம் குறைவுதான்...நமக்கு 5% தான் நிற்கும்....ஆனால் வீட்டுக்காரருக்கு பாதி மிச்சம்!இதைத்தான் அவருக்கு புரியவைத்தேன்...30 லட்ச ரூபாய் வேலையில 8% ம்னா 2,40,000...இதில் சூப்பர்வைசர்(அனுபவமிக்கவர்) சம்பளம் 6 மாதத்திற்கு பெட்ரோல் செலவு இதர செலவு உட்பட கண்டிப்பாக மாதம் 20000 என்றாலும் 120000 போனாலும் மீதி 120000 தான் நமக்கு...நமக்கும் மாதம் 20000 ரூபாய்தான்...அந்த சைட்டில் ஒரு கொத்தனார் சம்பளத்தைவிட இது குறைவு!

அதேநேரம் இம்முறையால் வீட்டு ஓனருக்கு அந்த 7% மிச்சத்தால் 210000 லாபம்...இதைவிட அவர்களுக்கு எப்படி புரியவைப்பது?இது தொழிலுக்கு வரும் புதிய பொறியாளர்களுக்கான பதிவு!விழிப்புணர்வு பதிவு!

நல்லதுக்கு காலமில்லை என்பாங்கல்ல...அது இதுதான்!

49th💻Approval🖨Plan📑
24/08/2021

49th💻Approval🖨Plan📑

💻Model Plan-6🖨🏡Site:Anjugramam🌴KK District... 'S_Design_Arc_&_Constructions_
23/08/2021

💻Model Plan-6🖨
🏡Site:Anjugramam🌴KK District...
'S_Design_Arc_&_Constructions_

Address

VADAKKANKULAM
Tirunelveli

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 2pm

Telephone

9043747037

Website

Alerts

Be the first to know and let us send you an email when JP'S Constructions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share