29/04/2022
பொதுவாக நாம் வீடு கட்டும் போது அழகுக்காக வீட்டின் தலைவாசல் பக்கத்தில் இது போல இணைப்பாக(attach) ஜன்னல் அல்லது (fixed glass)நிலைப்பு கண்ணாடிகள் அமைப்பது வழக்கம்.
அதுபோல அமைக்கும் போது அதனை கதவின் பூட்டு வரும் பக்கத்திற்கு அருகில் வராமல் அதன் மறு பக்கம் தான் அமைக்க வேண்டும்.
(படத்தில் உள்ளது போல.)
அருகில் மாற்றி அமைக்கும் பட்சத்தில் நாம் வீட்டினுள் இருக்கும்போது ஏறுதாள் (latch) அல்லது safty lock மட்டுமே பயன்படுத்துவோம்.அப்போது பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து சுலபமாக இந்த இரண்டையும் கையை விட்டு திறக்கலாம்.முடிந்த வரை இவ்வாறு அமைப்பதை தவிருங்கள்.
இது போல ஏற்கனவே அமைத்தவர்கள் அல்லது அப்படி கட்டாயம் அமைக்க வேண்டி சூழல் இருந்தால் கதவின் வெளி பக்கத்தில் பாதுகாப்பு இரும்பு கதவு (safty grill) நிச்சயம் அமைக்க வேண்டும்.வீட்டில் இரவு நேரங்களில் இருக்கும் போது அல்லது தூங்கும் போது அதை உள்பக்கம் பூட்டு போட்டு பயன்படுத்த வேண்டும்.
அல்லது கை எட்டாதவாறு கதவிலிருந்து ஜன்னல் அல்லது நிலைப்பு கண்ணாடியை இரண்டு அடி தள்ளி அமையுங்கள்.
அழகை விட பாதுகாப்பு மிக முக்கியம் நட்புகளே...
நட்புகளின் பாதுகாப்புக்காக ...❤️😁
நன்றி