Engineering Links My work Electrician for SAUDI ARABIA

  • Home
  • Engineering Links My work Electrician for SAUDI ARABIA

Engineering Links My work Electrician for SAUDI ARABIA Ikramulla

24/07/2025
உங்கள் வாழ்வில் நிரந்தர ஊன்றுகோல் என்றும் உங்கள் "மனைவி" மட்டும்தான். நீங்கள் பாசத்தை அள்ளி வீசி வளர்த்த உங்கள் பிள்ளைச்...
12/10/2024

உங்கள் வாழ்வில் நிரந்தர ஊன்றுகோல் என்றும் உங்கள் "மனைவி" மட்டும்தான்.

நீங்கள் பாசத்தை அள்ளி வீசி வளர்த்த உங்கள் பிள்ளைச் செல்வங்கள் பெருத்து ஆளாகி திருமணம் முடித்ததும் உங்களை விட்டும் தூரமாகிவிடலாம். ஊர்விட்டுச் செல்லலாம், நாடு துறந்தும் போகலாம்.

நீங்கள் ஒரு காலம் ஆனந்தமாக உறவாடிய அன்பான சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பம் என்று பிஸியாகி விடுவார்கள்.
இறுதி காலத்தில் கைபிடிக்க சகோதரனும் வரமாட்டான், கண்ணீர் விட சகோதரியும் வர மாட்டாள். எல்லோரும் அவரவர் வாழ்வென்று பிரிந்து செல்வார்கள்.

உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் என யாருமே என்றும் கூடவே இருக்க வரமாட்டார்கள்.

இந்த உலகம் அவர்களை உங்களிடமிருந்த பலவந்தமாக பரித்தெடுத்துக்கொள்ளும்.

வாழ்வென்னும் ரயில் பயணத்தில் உங்களோடு இடைநடுவில் கடைபிடித்து ஏறிக்கொண்ட உங்கள் பாச மனைவிதான் உங்களோடு கூடவே இருக்கப் போகிறாள்.

நீங்கள் என்றும் சாய்ந்திருக்க அவள் புயம் மாத்திரமே உங்களுக்காக காத்திருக்கும்.

நீங்கள்
நோய்வாய்ப்படும் போது...
முதுமை அடையும் போது...
துக்க துயரங்களில் பங்கெடுக்க...
ஆத்திர அவசரம் என்று வரும் போது...
என்றும் உங்களை தாங்கும் ஊன்றுகோல்

ஆதலால் உங்கள் உறவுக்கு உரமூட்டுங்கள்.
நீங்கள் பரஸ்பரம் அன்பையும் பாசத்தையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அனாதரவாக மரணிக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாகாதீர்கள்.

🌷💎🌷💎

✍ தமிழாக்கம் / ikramulla

வழக்குகளும்வாதாடல்களும் வழக்கமாகி விட்டதே தவிர் வஞ்சகனின் வக்கிர புத்திக்கு வரையறை இல்லை போலும் எவனோ ஒருவனின் இளம்பிஞ்சு...
05/10/2024

வழக்குகளும்
வாதாடல்களும் வழக்கமாகி விட்டதே தவிர் வஞ்சகனின் வக்கிர புத்திக்கு வரையறை இல்லை போலும் எவனோ ஒருவனின் இளம்பிஞ்சுக் குழந்தை முதல் இளம் பெண் மேல் வரை வரும் மோகம் தன் வீட்டுப்பெண்கள் மீது வருவதில்லையோ..? கற்பை சூறையாடும் கயவர்களின் காமம் படுகொலை செய்யலும் அஞ்சுவதில்லை..! அவரவர் ஊரிலும் நாட்டிலும் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கா வரையறை? தலைப்பூச் செய்தியில் வருவதைக் காட்டிலும் தலையைக் கொய்து விடுவது சிறப்பு.... சில கீழ்மகன்களின்
செயல்களால்
பல பண்புள்ள ஆடவர்களின் மீது வேறுபாடறியாது வெறுப்பு உமிழ் சுரக்கிறது. வாழ்நாள் முழுக்க வாழாமல் வாழ்கிறாள் சிதைந்து போன சிறுமி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்வாழ்த்து கவிதைகள் வந்து வீழ்ந்திட..! வண்ணக் கனவுகள் பொங்கி எழுந்திட..!மண்ணில் பிறந்த இந்நாள...
06/01/2024

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்து கவிதைகள் வந்து வீழ்ந்திட..! வண்ணக் கனவுகள் பொங்கி எழுந்திட..!
மண்ணில் பிறந்த இந்நாள்
மறக்க முடியா பொன்நாள்
இதயம் எங்கும் இன்ப வெள்ளம்
இதர இடர்கள் விலகி செல்லும்
உண்மை சொல்லும் உங்கள் உள்ளம்.
ஒரு நாள்உலகம் வெல்லும்.
நீங்கள் கண்ட கனவுகள்
கனிந்திடும் தன்னால்.....
பிறர் கொண்ட கவலைகள்
கரைந்திடனும் உங்கள்
பெற்றோருக்கு பெருமையும்,
உற்றாருக்கு உரிமையும்,
மற்றோருக்கு நேர்மையும் தந்து
புதிரான வாழ்வை
புரிதலோடு அணுகி
புனையாப் புகழ் பெற்று
அணையா ஔி வீசிட என் அன்பு மகனே வாழ்த்துகிறேன்.

Address


Telephone

+916380062301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineering Links My work Electrician for SAUDI ARABIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Engineering Company?

Share