SRI Sowmiya Construction

SRI Sowmiya Construction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRI Sowmiya Construction, Construction Company, NO'8 R. K MOORTHY NAGAR, Vadalur.

வலி எந்த வடிவில்வந்தாலும்...அதை நேசத்தைக் கொண்டு துடைத்துவிடலாம்...நேசமே வலி என்றால்அதை எதைத் கொண்டுசரிசெய்வது?..விசமே வ...
17/04/2022

வலி எந்த வடிவில்
வந்தாலும்...
அதை நேசத்தைக் கொண்டு
துடைத்துவிடலாம்...

நேசமே வலி என்றால்
அதை எதைத் கொண்டு
சரிசெய்வது?..

விசமே விசத்திற்கு
மருந்தாவதைப் போல்!...

இதற்கும் ஏதேனும்
விந்தை உண்டோ?...

சேரிடம் அறிந்து சேர்க!×*×*×*×*×*×*×*×*×*×*சேரிடம் அறிந்து சேர்வீர்! செருபகை விலக்கி வாழ்வீர்!ஊருடன் பகைக்கின் சாய்வீர்! ...
09/08/2021

சேரிடம் அறிந்து சேர்க!
×*×*×*×*×*×*×*×*×*×*
சேரிடம் அறிந்து சேர்வீர்!
செருபகை விலக்கி வாழ்வீர்!
ஊருடன் பகைக்கின் சாய்வீர்!
உரிமைகள் இழப்பின் மாய்வீர்!
காரிருள் இருக்கத் தேய்வீர்!
கதிரவன் உதிக்கும் ஆய்வீர்!
தூரிகை பிடித்து மேய்வீர்!
துயரமும் ஒழிக்கப் பாய்வீர்!

மாருத இருக்கை சாய்வீர்!
மரகதப் படுக்கை ஓய்வீர்!
ஆருடம் கணிக்கச் சோர்வீர்!
அறிவியல் படித்துத் தேர்வீர்!
நாறுடல் வெறுக்கும் ஓர்வீர்!
நறுங்குணம் மணக்க நேர்வீர்!
பாரினில் சிறக்க ஊர்வீர்!
பசுந்தமிழ் செழிக்கக் காண்மீர்!!!!

மனிதன் மீது வைத்த அன்பு      பாசமானது !இதயம் மீது வைத்த அன்பு       உண்மையானது !ஏழையின் மீது வைத்த அன்பு       கருணையானத...
06/04/2021

மனிதன் மீது வைத்த அன்பு
பாசமானது !
இதயம் மீது வைத்த அன்பு
உண்மையானது !
ஏழையின் மீது வைத்த அன்பு
கருணையானது !
நண்பன் மீது வைத்த அன்பு
நேர்மையானது !
எப்போதும் அன்பு என்பதே
தெய்வீகமானது ..!!
சொந்தங்களுக்கு அன்பான 🙂🙂இனிய
காலை வணக்கம்!!
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் நன்றி.

09/09/2020

#கல்கி_ரா_கிருட்டிணமூர்த்தி அவர்கள்
பிறந்தநாள் இன்று - செப் . 09...
“ #கல்கி” #ரா_கிருட்டிணமூர்த்தி.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச்சோழர்களான #விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட #மகேந்திர_பல்லவன், #நரசிம்ம #பல்லவன், வாதாபியை ஆண்ட #புலிகேசி ஆகியோரைப் பற்றியும், #உறையூரையாண்ட_சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தியாவார். அதுமட்டுமா? இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மதக் கலவரங்களின் தீவிரத்தை நாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கலாமே தவிர பார்த்ததில்லை அல்லவா? “ #அலை #ஓசை” எனும் நாவலைப் படித்தால் நாம் அதை அப்படியே உணரலாம். அமரர் கல்கியின் “ #பொன்னியின்_செல்வன்”, “ #சிவகாமியின்_சபதம்”, “ #பார்த்திபன் #கனவு”, “ #அலை_ஓசை”, இன்ன பிற நூல்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய சாகா வரம் பெற்ற அமர காவியங்களாகும். இவற்றையெல்லாம் படைத்த இந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும்கூட. இவரது அந்த முகத்தைச் சற்று இங்கே பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தை அடுத்த புத்தமங்கலம் எனும் கிராமத்தில் 1899இல் பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி. மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கச் சென்றார். 1920இல் நடந்த நாகபுரி காங்கிரஸ் தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும், கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை விட்டு வெளியேறினார். இவருக்கு மகாத்மா காந்தி, ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகியோர் ஆதர்ச தலைவர்களாக விளங்கினர். 1922இல் முதன்முதல் ராஜத்துவேஷப் பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். வயதில் குறைந்தவர் என்பதற்காக இவரை எச்சரித்து விட்டுவிட நினைத்த நீதிபதியிடமே, இவர் தான் தெரிந்தே ராஜ துவேஷப் பேச்சு பேசுவதாக இவர் தெரிவித்ததும், ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

திருச்சியில் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைமையகம் இருந்தது, விடுதலையானதும் கிருஷ்ணமூர்த்தி அங்கு வேலையில் சேர்ந்தார். 1921இல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது இவர் டாக்டர் ராஜனுடன் சேர்ந்து வரவேற்பு, கூட்டம் ஆகிய ஏற்பாடுகளில் ஈடுபட்டு, மகாத்மாவால் ‘அச்சா தேஷ் சேவக்” என்று பாராட்டப் பெற்றார். கரூரில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்தபோது மதுரையைச் சேர்ந்த இளைஞர் சதாசிவம் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நட்பு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தது. “ #கல்கி” பத்திரிகை தோன்றவும் காரணமாக இருந்தது. இவரது முதல் நாவல் வ.ரா. ஆசிரியராக இருந்த நடத்திய “ #சுதந்திரன்” எனும் பத்திரிகையில் வெளிவந்தது.

பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களிலேயே ராஜாஜியைப் பற்றி தெரிந்து கொண்டு அவரிடம் பக்தி கொண்டார். திருச்சி காங்கிரஸ் அலுவலக வேலையைத் தொடர்ந்து, இவர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். டாக்டர் ராஜனின் வேண்டுகோளின்படி இவர் #திரு_வி_க.வைச் சந்தித்தார். அவர் நடத்தி வந்த “ #நவசக்தி” இதழில் வேலை செய்தார். மகாத்மா காந்தி “யங் இந்தியா”வில் எழுதி வந்த சுயசரிதையை இவர் மொழிபெயர்த்து “நவசக்தி”யில் வெளியிட்டார். இவர் ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து அங்கிருந்து வெளியான “விமோசனம்” எனும் மதுவிலக்குப் பிரச்சார இதழிலும் எழுதி வந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவரது ஆரோக்கியம் கருதியும், ஏற்கனவே ஓராண்டு சிறையில் தவமிருந்ததாலும் ராஜாஜி இவரைத் தன் படையில் சேர்ந்துக் கொள்ளவில்லை. உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் கலந்து கொண்டு சிறை செல்லவில்லையாயினும், இவரது எழுத்துக்கள் ஆயிரமாயிரம் தொண்டர்களை உசுப்பி இந்தப் போரில் கலந்து கொள்ளத் தூண்டுதலாயிருந்தது என்பது உண்மை. இவர் எழுதி வெளியிட்ட துண்டு பிரசுரங்களுக்காக இவருக்கு மறுபடியும் ஒரு ஆறுமாத #சிறை_தண்டனை கிடைத்தது.

விடுதலையான பிறகு “ #ஆனந்த #விகடனில்” தொடர்ந்து எழுதிவரலானார். அதில் இவர் எழுதிய “ #தியாக_பூமி” நாவல் தமிழ்நாட்டை மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஓர் புதிய எழுச்சியையும், தேச பக்தியையும் தூண்டியது. அந்த காலகட்டத்தில் அந்த நாவலில் வந்த ‘ #சரோஜா’ எனும் குழந்தையின் பெயரைப் பலர் தங்கள் குழந்தைகளுக்கும் வைத்தனர் என்பது ஒரு சுவையான செய்தி. “ஆனந்த விகடனில்” ஒன்பது ஆண்டுகள் வேலை பார்த்த பின் “ #கல்கி” எனும் பெயரில், இவரும் சதாசிவமும் இணைந்து ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டனர். அதில் வெளியான இவரது வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், இசை விமரிசனங்கள், தலையங்கங்கள் ஆகியவை வரலாற்றுப் புகழ் மிக்கன. அவையெல்லாம் மீண்டும் நூல் வடிவம் பெற்று இப்போது விற்பனையாகின்றன. இப்போதும்கூட அவை படிப்பதர்கு சுவையும், சூடும் நிறைந்திருப்பதைக் காண முடியும்.

#மகாகவி_பாரதியாரின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டு, அவர் நினைவாக எட்டயபுரத்தில் ஓர் மணிமண்டபம் கட்டுவதர்கு முன்முயற்சி எடுத்து, கட்டி முடித்து அதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜியினால் திறந்து வைத்த சேவையைத் தமிழகம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும். இவருக்கு நாட்டு நன்மை என்பதுதான் தாரக மந்திரம் இதை அவர் பாணியில் கூறுவதென்றால், அவருக்கு இருந்த மூன்று நோக்கங்கள் முதலாவது தேச நன்மை, இரண்டாவது தேச நன்மை, மூன்றாவது தேச நன்மை.

இந்த வரலாற்று ஆசிரியர், சுவாரசியமான எழுத்தாளர், இசை ரசிகர், பாரதி அன்பர், தேச பக்தர், தமிழ் நாவல்களைப் படிக்கத் தூண்டிய அபூர்வமான கதாசிரியர் 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் நாள் தனது 55ஆம் வயதில் காலமானார். தமிழ் நாட்டில் ஓர் சகாப்தம் நிறைவடைந்தது. வாழ்க #கல்கி_ரா_கிருட்டிணமூர்த்தி புகழ்!

புத்தகம் ஆணா ? பெண்ணா?குழந்தையா?"குழந்தைதான்"அலமாரியில் இருக்கும் போதுதொட்டிலில் குழந்தை தூங்குவது போல் இருக்கும்புத்தக ...
03/05/2020

புத்தகம்
ஆணா ? பெண்ணா?
குழந்தையா?

"குழந்தைதான்"

அலமாரியில் இருக்கும் போது
தொட்டிலில் குழந்தை தூங்குவது போல் இருக்கும்

புத்தக வாசிப்பும்
குழந்தையைக் கொஞ்சுவது போல் தான் சலிப்பைத் தராதது

குழந்தையிடம் பேசினால்
புதிய உலகம் பிறக்கும்
புத்தகம் வாசித்தால்
புதிய உலகம் திறக்கும்....,!!!!

17/01/2020

இயற்கையின் எழில்
இசையின் இனிமை
காற்றின் வேகம்
அலையின் சீற்றம்
வரிகளின் வலிமை
மலரின் மென்மை
விழிகளின் இமைகள்
எழிமையின் எடுத்துக்காட்டு
கவிதையின் கற்பனை
உலகின் உருவம்
காதலின் தொடக்கம்
அழகின் அம்சம்
என்னவளின் தூய்மை
அன்[பு]பின் அடக்கம்
தாய்மொழி என அவளும்
அதில் வார்த்தையாய் நானும்!!

முகிலாகிக் கருணை எனும் மழை பொழிவாய்எந்த முறையீடு சொன்னாலும் வழி சொல்லுவாய்தாய்மையின் வடிவாய் எழுந்தருள்வாய் உன் திருவடி ...
17/01/2020

முகிலாகிக் கருணை எனும் மழை பொழிவாய்

எந்த முறையீடு சொன்னாலும் வழி சொல்லுவாய்

தாய்மையின் வடிவாய் எழுந்தருள்வாய் உன் திருவடி பணிந்தால் நலம் தருவாய்

வைகறை மலர் போல் மணம் தருவாய்
எந்த வரம் கேட்டாலும் உடன் தருவாய்

காலத்தின் மாற்றமெல்லாம் உன் ஜாலங்கள்
கருணையின் ஒளிதான் உன் தீபங்கள்....!!!!!!!
காலை வணக்கம்! வாழ்க வளமுடன்

ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அறிவோ, அழகோ, பணமோ தேவையில்லை... !!! நமக்கு உண்மையான அக்கறையும், ஒழக்கமும், நாண...
18/04/2019

ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அறிவோ, அழகோ, பணமோ தேவையில்லை... !!!
நமக்கு உண்மையான அக்கறையும், ஒழக்கமும், நாணயமும், !!!!

அவர்களுக்கு நம்மேல் நம்பிக்கையும், இருந்தால் போதும் அதுவே உண்மையான நம்பிக்கை , !!! !!! !!!

களிப்பான காலை வணக்கங்கள்🙂🙂என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் நன்றி.

Construction buildings
27/08/2018

Construction buildings

19/07/2018
13/04/2018

ஊற்றெடுக்கும் உள்ளம் உள்ள வரை
ஊன்றி எழு....!!

உள்ளத்தை ஊனமாக்கிவிடாதே
உள்ளதை நம்பு...!!

உயரப் பறக்க நினைக்காதே
உயரும் வரை போராடு....!!

இனிய தொரு மதிய பொழுது...வணக்கம் ⚘என் இனிய நல்வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்நன்றி.

Address

NO'8 R. K MOORTHY NAGAR
Vadalur
607303

Telephone

+919842311678

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Sowmiya Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SRI Sowmiya Construction:

Share