கல்கி

கல்கி இது ஒரு பல்சுவை கதம்பத்திற்கான பக்கம்.

26/10/2024

ஒரு ஊரில் ஒரு ஆள் தையல் கடை வைத்திருந்தான்.
அவனிடம் ஒருவன் ஒரு சட்டை துணி எடுத்துக் கொடுத்து தைக்க சொல்லியிருந்தான்.
வருகின்ற சனிக்கிழமை வந்து வாங்கிட்டு போ என்று அவன் சொல்லியிருந்தான்.
அதே மாதிரி இவன் வந்தான்.
அவன் தைத்து வைத்திருந்த சட்டையை கொடுத்தான்.
இவன் வாங்கி அங்கேயே போட்டு பார்த்தான்.
கை நீளம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தது.
வலது கை இடது பக்கத்தை விட நீளம் குறைவாக இருந்தது.
என்ன இது இப்படி செய்து விட்டாய்? என்று இவன் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டான்.
அதற்கு அவன் சொன்னான் ஐயையோ! இதற்காகவா சங்கடப்படுகிறாய்!
வலது கையை மட்டும் கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக்கொள் சரியாகப் போகிறது.
மற்றபடி இந்த சட்டையில் உள்ள கலை அம்சத்தை கவனித்து பார்.
எவ்வளவு அற்புதமாக செய்திருக்கிறேன்.
ஒரு சின்ன குறையைப் பொருட்படுத்தாமல் நான் சொன்னது மாதிரி கையை கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக் கொள்.
நடந்து போ அருமையாக இருக்கும் என்றான்.
அவனும் யோசித்துப் பார்த்தான் சரியான யோசனையாக தோன்றியது.
கொஞ்சம் முயற்சி செய்து வலது கையை உள்ளே இழுத்து சட்டை சரியாக இருப்பது போல் பண்ணிக்கொண்டான்.
இப்போது மறுபடியும் ஒரு பிரச்சனை வலது கையை உள்ளே இழுத்து வைத்துக்கொண்டால் முதுகுப்பக்கம் கொஞ்சம் துணி தளர்த்தியாக தொங்குவது மாதிரி இருந்தது.
என்ன இது முதுகுப்பக்கம் துணி குவிந்து விட்டது என்றான்.
அவன் இதற்காகவா கவலைப்படுகிறாய்?
உடம்பை அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் வளைத்துக் கொள் சரியாக போய்விடும்.
இதற்காக அந்த அழகான தையலைப் பிரித்து அதில் உள்ள கலை அம்சத்தை கெடுக்க என் மனசு இடம் கொடுக்கவில்லை.
எவ்வளவு தளர்ச்சியாக இருக்குதோ அவ்வளவுக்கு கொஞ்சம் உடம்பை வளைத்து கொள் என்றான் தையல்காரர்.
அதுவும் நல்ல யோசனையாக தோன்றியது சரி என்று சொல்லி விட்டு புறப்பட்டான்.
தெருவில் இறங்கினான்.
கொஞ்சம் கையை உள்ளே இழுத்து உடம்பை கொஞ்சம் வளைத்துக் கொண்டான்.
சட்டைக்கு தகுந்த மாதிரி பண்ணி கொண்டான்.
மெதுவாக நடந்து போனான் இப்போது எதிரில் ஒருவன் வந்தான்.
இவனைப் பார்த்தான் " ஆஹா அற்புதம் என்ன அழகான சட்டை சும்மா சொல்லக்கூடாது.
ரொம்ப நல்லா இருக்கிறது.
நிச்சயமாக இந்த ஊர் மேல் தெருவில் உள்ள தையல்காரர்தான் இதை தைத்திருக்க வேண்டுமென்றான்".
இதைக் கேட்டதும் அவனுக்கு ஆச்சர்யம்!
அதெப்படி அவ்வளவு சரியாக சொல்கிறாய்? என்று கேட்டான்.
அதற்கு அந்த வழிப்போக்கன் " அவன் ரொம்ப கெட்டிக்காரன் உன்னைப்போல் உடம்பும் கையும் வளைந்து போன ஒரு ஆளுக்கு அவனைத் தவிர வேறு யாரால் இவ்வளவு பொருத்தமான சட்டை தைக்க முடியும்? "என்றான்.
தையல்காரன் பேச்சை கேட்டு அனுசரிக்க போய் இவனோட நிலைமை இப்படி ஆகிவிட்டது.
இதே மாதிரிதான் சில விடயங்கள் நம்மையும் கோமாளி ஆக்கிவிடும்.
எதுவாக இருந்தாலும் அந்த விடயத்தில் ஒரு அறிவுப் பூர்வமான அணுகுமுறை நிச்சயம் அவசியம்.

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போதுசெருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்ட...
14/10/2024

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது

செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.

அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.

அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...

ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...

ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

அவ்வளவுதான்க வாழ்க்கை

ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...

Copy .. யானை

பார்தீபன் இன்னமும் பசியோடுதான் இருக்கிறான். வரலாறு அளிக்கப்படுவதில்லை மறக்கப்படுகின்றது.
25/09/2024

பார்தீபன் இன்னமும் பசியோடுதான் இருக்கிறான். வரலாறு அளிக்கப்படுவதில்லை மறக்கப்படுகின்றது.

• இந்த உலகம், நீ எப்போது கீழே விழுவாய் என்று பார்த்துக்கொண்டு இருக்கும். நீ ஏறுவதை எல்லாம் ரசிக்காது.• பணம் இருந்தால் தா...
19/08/2024

• இந்த உலகம், நீ எப்போது கீழே விழுவாய் என்று பார்த்துக்கொண்டு இருக்கும். நீ ஏறுவதை எல்லாம் ரசிக்காது.

• பணம் இருந்தால் தான் நீ உறவினர். இல்லை என்றால் உறவு - இல்லார். அனாதை தான்.

• வாழ்க்கையில் எந்த ஒரு உயர்வுக்கு நீ போனாலும் உன்னை மட்டம் தட்ட கீழ் இருக்கும் நபர்கள் குறைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

• பணத்திற்கு சாதி மதம் எல்லாம் இல்லை. பணம் இல்லையேல் சாதி மதம் எல்லாம் பார்க்கப்படும்.

• நீ ஒரு வேலையில் இருக்கும் போது வேலை இல்லாத நண்பன் போன் செய்தால் ஒரு தடவை நீ யோசிக்கதான் செய்வாய்.

• கடைசி வரை உன்கூட இருக்கப்போகும் உறவு நீ மட்டுமே. உன் மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தப்போவது உன் பெற்றோர் மட்டுமே.

• நாம் முன்னேறுவதை பார்த்து பொறாமை படும் கூட்டமே இங்கு ஜாஸ்தி. அந்த பொறாமை அவர்களை என்னென்னமோ வேலைகள் செய்ய தூண்டும்.

• பல நேரங்களில் நம் முதுகில் குத்துவது நாம் நேசிக்கும் உறவுகளே. இது புரிய நாள் ஆகும்.

• நாம் இருக்கும் போதும், இறக்கும் போதும் நம் பின்னால் பேசுபவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.

• இங்கு பாதி பேர் கடவுளை தரிசிப்பதற்கு காரணமே, அவர்களின் புலம்பலை கேட்க ஆள் இல்லாத காரணங்கள் தான்.....

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்

Copy

06/02/2024
With Mr Adrenaline – I just got recognised as one of their top fans! 🎉
04/12/2023

With Mr Adrenaline – I just got recognised as one of their top fans! 🎉

Address

அளவெட்டி
Jaffna

Telephone

+94771900559

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்கி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கல்கி:

Share